தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களி்ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது தகவல் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்ததகம் கடும் சரிவை சந்தித்தது. நேற்றைய தினம் சென்செக்ஸ் 872 புள்ளிகளும், நிஃப்டி 261 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன. இதனால் இன்றைய பங்குச் சந்தை போக்கு எப்படி இருக்குமோ என்ற கலக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நிபுணர்கள்
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குச் சந்தையில் இன்று இன்ட்ராடே வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ள ரூ.100க்கும் குறைவான 3 நிறுவன பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில், ஃபிலாடெக்ஸ் இ்ந்தியா, எச்எஃப்சிஎல் மற்றும் ஜியோஜித பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய 3 நிறுவன பங்குகளும் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேசமயம், இந்த பங்குகளில் முதலீடு செய்யும்போது, கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஃபிலாடெக்ஸ்
பிரபுதாஸ் லில்லாதேர் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவு துணை தலைவர் வைஷாலி பரேக் கூறுகையில், நாட்டின் முன்னணி பாலியஸ்டர் இழை நூல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஃபிலாடெக்ஸ் இந்தியா பங்கினை ரூ.49 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.55ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.47. நேற்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.48.69ல் முடிவுற்றது.
எச்எஃப்சிஎல்
எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவா கூறுகையில், தொழில்நுட்ப நிறுவனமான எச்எஃப்சிஎல் பங்கினை ரூ.85.50 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.89.30ஆக கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.84.நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.86.05ஆக இருந்தது.
ஜியோஜித் பைனான்சியல்
லட்சுமிஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் அண்ட் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் அன்ஷுல் ஜெயின், இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்துக்கு ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் பங்கினை பரிந்துரை செய்துள்ளார். இந்நிறுவன பங்கினை ரூ.85 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் விலை ரூ.90 வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.84. நேற்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.85.08ல் முடிவுற்றது.
விதம் விதமாக டிவிடெண்ட் கொடுத்த மருந்து நிறுவனம்..! டிவிடெண்ட் தொகை எவ்வளவு தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications