மருந்து துறையை சேர்ந்த நிறுவனம் பைசர் லிமிடெட். இ்நநிறுவனம் மருந்து பொருட்கள் உற்பத்தி. சந்தைப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் விநியோகஸ்தர்கள், ஸ்டாகிஸ்டுகள், சுகாதார வல்லுனர்கள், மருத்துவமனைகள், பராமரிப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அடங்கும். பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
மார்ச் காலாண்டு
பைசர் லிமிடெட் நிறுவனம் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.331 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 85 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.179 கோடி ஈட்டியிருந்தது.

2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.592 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் வளர்ச்சியாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.546.63 கோடி ஈட்டியுள்ளது.
சிறப்பு டிவிடெண்டு
கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற பைசர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், பங்குதாரர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.10ம், நிறுவனத்தின் 75வது ஆண்டை கருத்தில் கொண்டு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு சிறப்பு டிவிடெண்டாக ரூ.100ம், குத்தகைக்கு விடப்பட்ட நிலம மற்றும் அதன் மீது கட்டப்பட்ட கட்டிடத்தை மாற்றுவதன் மூலம் கிடைத்த லாபத்தை கருத்தில் கொண்டு, பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு சிறப்பு டிவிடெண்டாக ரூ.30ம் வழங்க இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆக, 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.165 (1,650 சதவீதம்) டிவிடெண்டாக கிடைக்கும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மார்ச காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, பங்குதாரர்களுக்கு அதிரடி டிவிடெண்ட் அறிவிப்பு போன்ற காரணங்களால் இந்நிறுவன பங்குகளின் விலை விறுவிறுவென உயர்ந்தது.
பங்கு விலை
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே பைசர் நிறுவன பங்கின் விலை 13 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.5,049.80 வரை சென்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின இடையே பைசர் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.6,452.85ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது இந்நிறுவன பங்கு அதன் உச்ச விலையிலிருந்து 23 சதவீதத்துக்கு மேல் குறைவாக உள்ளது.
ஜென் டெக்னாலஜிஸ் பங்கு மதிப்பீட்டை குறைத்த மோதிலால் ஓஸ்வால்..! என்ன காரணம் தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications