ஜென் டெக்னாலஜிஸ் பங்கு மதிப்பீட்டை குறைத்த மோதிலால் ஓஸ்வால்..! என்ன காரணம் தெரியுமா..?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகளின் விலை மளமளவென உயர்ந்தது. அந்த பங்குகளில் ஒன்று ஜென் டெக்னாலஜிஸ்.

சென்சார்கள்
ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்சார்கள் மற்றும் சிமுலேட்டர்கள் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு பயிற்சி அமைப்புகளை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் கடந்த மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வலுவான செயல்திறன் போன்ற காரணங்களால் ஜென் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை தொடா்ந்து 8 வர்த்தக தினங்களாக அப்பர் சர்க்கியூட் அடித்தது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை சுமார் 48 சதவீதம் உயர்ந்தது.

ஜென் டெக்னாலஜிஸ் பங்கு மதிப்பீட்டை குறைத்த மோதிலால் ஓஸ்வால்..! என்ன காரணம் தெரியுமா..?

2025 மார்ச் காலாண்டில் ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.290 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 116 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.84.9 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 117 சதவீதம் வளர்ச்சியாகும். கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.150 கோடி மதிப்பிலான வர்ததக ஆர்டர்களை பெற்றுள்ளது.

ஆர்டர் வரத்து
2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.800 கோடி ஆர்டர் வரத்து வழிகாட்டுதலை அப்படியே மாற்றமின்றி nஜன் டெக்னாலஜிஸ் வைத்துள்ளது. ஜென் டெக்னாலஜிஸ் நல்ல லாபம் ஈட்டுகிறது மற்றும் அந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ள போதிலும், இந்நிறுவனத்துக்கான மதிப்பீட்டை பங்கு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் குறைத்துள்ளது. இது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், ஜென் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கு குறித்த தனது மதிப்பீட்டை ''வாங்கலாம்'' என்பதிலிருந்து ''நீயூட்ரல்'' ஆக குறைத்துள்ளது. இது தொடர்பாக தரகு நிறுவனம் கூறுகையில், நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் சூழல் ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு சாதகமாக உள்ளது. ஆனால் விலையுயர்ந்த பங்கு விலை காரணமாக பங்கின் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலக்கு விலை
மேலும், ஜென் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் இலக்கு விலையை ரூ.1,750ஆக மாற்றியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.93 சதவீதம் உயர்ந்து ரூ.1,902.05ஆக இருந்தது. இதன்படி பார்த்தால் இப்பங்கின் விலை 8 சதவீதம் வரை குறையும் என்பதை இது குறிப்பிடுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஜென் டெக்னாலஜிஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 4,785 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 99 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் இதுவரையிலான காலத்தில் ஜென் டெக்னாலஜிஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 73 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது.

7% குறைந்த தங்கம் விலை.. ஓடி வந்த மக்கள்.. மகிழ்ச்சியில் நகைக்கடைக்காரர்கள்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+