இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக கடந்த ஏப்ரலில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அந்த மாதம் 22ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை எட்டியது. தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் தங்களது தங்கம் வாங்கும் நினைப்பை கொஞ்சம் ஒத்திவைத்தனர். இதனால் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்தது.
வரி- போர்
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா-சீனா இடையே வரி தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தணிந்தது போன்ற காரணங்களால் பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை குறைந்தது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் தங்கத்தின் விலை சுமார் 4 சதவீதம் குறைந்தது. ஒட்டுமொத்தத்தில் தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து சுமார் 7 சதவீதம் குறைந்துள்ளது.

தங்கம் விலை குறைந்ததால் மக்கள் மீண்டும் நகைக்கடைகளுக்கு சென்று நகைகளை வாங்கி வருகின்றனர். இந்திய தங்கம் மற்றும் நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், அட்சய திருதியைக்கு பிறகு, விலைகள் அதிகமாக இருந்ததால், தங்கச் சந்தை மந்தமாகவே இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறைந்ததால் மக்கள் மீண்டும் சந்தைக்கு திரும்புவதை கண்டோம்.
அச்சம்
ஜூன் மாத திருமணங்களுக்காக மக்கள் பெரும்பாலும் வாங்குகிறார்கள். சிலர் நவம்பர் மற்றும் டிசம்பர் திருமணங்களுக்காக கூட ஆர்டர் செய்கிறார்கள். ஏனெனில் 90 நாள் காலததிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பரஸ்பர வரியை விதித்தால் தங்கத்தின் விலை உயரக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். நகைக்கடைக்காரர்களிடமிருந்து வரும் தகவல்களின்படி, டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களிலும் மக்கள் நகைக்கடைக்கு வருவது அதிகரித்துள்ளது.
9 காரட்
சங்கம் சமீபத்தில் இந்திய தரநிலைகள் பணியகத்திற்கு (பிஐஎஸ்) எமுதிய கடிதத்தில், 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் செய்யும் தனிததுவமானஅடையாள எண்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது. தற்போது 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் அமலில் உள்ளது என்று தெரிவித்தார்.
அண்மையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கல்யாணராமன் கூறுகையில், வைர நகைகள் இப்போது பெரும்பாலும் 18 காரட் தங்கத்துக்கு பதிலாக 14 காரட் தங்கத்தால் தயாரிக்கப்படுகின்றன. முன்பு 22 காரட்டில் மட்டுமே பிளைன் தங்க நகைகள் இருந்தது. ஆனால் இப்போது நிறுவனம் சில சந்தைகளில் 18 காரட் தங்க நகைகளை வழங்க தொடங்கியுள்ளது.
ஜென் இசட்
இருப்பினும் தமிழ்நாடு போன்ற சில சந்தைகளில் 18 காரட் நகைகளுக்கு வணிகத்தை பிடிப்பது கடினம். மக்கள் இன்னும் 22 காரட் வாங்குகிறார்கள். 18 காரட் தங்கம் ஜென் இசட் (இசட் தலைமுறையினர்) தயாரிப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?



Click it and Unblock the Notifications