பிப்.1 (இன்று) 2018-19ஆம் நிதியாண்டில் பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தை விடவும் கூடுதலான முதலீடுகள் குவிந்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 6 முக்கியமான நிறுவனங்கள் 52 வார உயர்வை அடைந்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
எல் அண்ட் டி
10.15 மணி அளவில் எல் அண்ட் டி நிறுவனப் பங்குகள் 3.06 சதவீதம் வரையில் உயர்ந்து 1,459.75 ரூபாய் வரையில் உயர்ந்து 52 வார உச்சத்தைத் தொட்டது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
2.01 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கிற்கு 15.35 ரூபாய் வரையில் உயர்ந்து 778.40 ரூபாய் அளவை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் எட்டியது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
1.86 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கிற்கு 18.35 ரூபாய் வரையில் உயர்ந்து 1004.90 ரூபாய் அளவை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் அடைந்துள்ளது
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2.45 சதவீதம் வரையில் உயர்ந்து 3,188.60 ரூபாய் என்ற 52 வார உச்சத்தைத் தொட்டது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன்
0.74 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கிற்கு 2.95 ரூபாய் வரையில் உயர்ந்து 400.65 ரூபாய் அளவை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் பங்குகள் எட்டியது.
இண்டஸ்இந்த் பேங்க்
1.42 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கிற்கு 24.90 ரூபாய் வரையில் உயர்ந்து 1778.00 ரூபாய் அளவை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் அடைந்துள்ளது
நியூஸ்லெட்டர்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications