5 வருடத்தில் 11,500% வளர்ச்சி.. அடேங்கப்பா 1 லட்சம் போட்டிருந்தா இப்போ 1.15 கோடி..!!

இந்த உலகத்தில் பணம் சம்பாதிக்கப் பல வழிகள் இருந்தாலும், சில காலத்தில் சில விஷயங்கள் தான் அதிகளவில் சம்பாதிக்க டிரென்டாக இருக்கும். அந்த வகையில் தற்போது பங்குச்சந்தையும், பங்குச்சந்தை முதலீடும் மிகப்பெரிய அளவில் மக்கள் கவனிக்கத் துவங்கியுள்ளனர்.

இன்றவில் 25 முதல் 35 வயதுடைய இளைஞர்கள் பட்டாளம் மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, வருடத்திற்குப் பல லட்சங்களைச் சம்பாதிக்கிறார்கள்.

அந்த வகையில் உங்களை ஆச்சரியமூட்டும் வகையில், ஐந்தே வருடத்தில் சுமார் 11,500% வளர்ச்சி அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நிறுவனங்களையே இப்போது பார்க்கப்போகிறோம்.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

சென்செக்ஸ் குறியீடு கடந்த 5 வருடத்தில் சுமார் 85 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது, இதில் பல நிறுவனங்கள் பல மடங்கு வளர்ந்து முதலீட்டாளர்களைக் கோடீஸ்வரன் ஆகியுள்ளனர்.

இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ்

இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ்

2012-2017ஆம் ஆண்டுகள் மத்தியில் இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 11,419 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு விலை 1.57 ரூபாயில் இருந்து தற்போது 180.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டெக்ஸ்டைல் பொருட்களைத் தயாரிக்கிறது.

 

முதலீடும் வளர்ச்சி

முதலீடும் வளர்ச்சி

இந்நிலையில் 2012ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது 1.15 கோடி ரூபாயாக வளர்ந்து இருக்கும்.

அவன்தி பீட்ஸ்

அவன்தி பீட்ஸ்

இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இப்பட்டியலில் இடம்பெறும் அடுத்த நிறுவனம் என்றால் அவன்தி பீட்ஸ் (Avanti Feeds) நிறுவன பங்குகள் 5,000 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

இதன் மூலம் 2012ஆம் ஆண்டில் வெறும் 22.31 ரூபாயில் இருந்து தற்போது 1,316.5 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனமும் ஒவ்வொரு வருடமும் 30 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருகிறது இந்நிறுவனம்.

 

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை

2012-17ஆம் ஆண்டுக் காலத்தில் தேசிய பங்குச்சந்தை இருக்கும் 8கே மையில் 4,153 சதவீதமும், கேன் பின் ஹோம் 3,244 சதவீதமும், மார்க்சான்ஸ் பார்மா 2,957 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

மேலே கூறிய நிறுவனங்களைத் தாண்டி பிஎஸ்ஈ500 குறியீடு சந்தையில் 34 நிறுவனங்கள் 1,000 சதவீதம் முதல் 2,500 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் 47 நிறுவன பங்குகள் 500 சதவீதம் முதல் 1,000 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+