ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனம் வெப் 3.0 தொழில்நுட்பத்தில் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய கேமிங் தளங்கள், டிஜிட்டல் ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து புதிய 52 வார உச்சமான ரூ.134.42ஐ எட்டியது.
நிதி நிலை முடிவுகள்
ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் கடந்த 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை வெளியானதை தொடர்ந்து, பங்கின் விலை மளமளவென ஏற்றம் கண்டுள்ளது. ஸ்மால் கேப் பங்கான ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். கடந்த நிதியாண்டில் ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.407.36 கோடி ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 169.4 சதவீதம் அதிகமாகும்.

2024-25ம் நிதியாண்டில் ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.35.25 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 225.8 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.134.42ஆக உயர்ந்தது. இது இந்நிறுவன பங்கின் புதிய 52 வார அதிகபட்ச விலையாகும்.
புதிய உச்சம்
2024 அக்டோபர் 31ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.11.79க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் இப்பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 673 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டை 9,400 சதவீதம் பெருக்கியுள்ளது.
ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், எங்கள் 169.40 சதவீத வருவாய் வளர்ச்சி, வெப் 3.0 உள்கட்டமைப்புக்கான அதிகரித்து வரும் தேவையை பிரதிபலிக்கிறது. எங்கள் Blockchain Validation Nodes மற்றும் Digital Asset Treasury மூலம் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் சொத்து பொருளாதாரத்திற்கு சக்தி அளிக்கும் எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குகிறோம் என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் சொத்து
ஸ்ட்ரிங் மெட்டாவர்ஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 200 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது. திரட்டும் நிதியை டிஜிட்டல் சொத்து கையகப்படுத்துதல் மற்றும் பிளாக்செயின் உள்கட்டமைப்பின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்நிறுவனம் தனது எதிர்கால வளர்ச்சி குறித்து சரியான திட்டமிடலும் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
இது கொஞ்சம் புதுசு..! டிவிடெண்டு வழங்கும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்.. எந்த கம்பெனி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications