பொதுவாக பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இதனால் பெரும்பாலான சில்லரை முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்த வருகின்றனர். இருப்பினும் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பலரும் இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். தினசரி வர்த்தகம் தொடங்கி அது நிறைவடைவதற்குள் பங்குகளை வாங்கி விற்பனை செய்து லாபம் சம்பாத்திக்கின்றனர்.
நல்ல பங்குகளை சரியான விலையில் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றால் இது சாத்தியம்தான். அந்த வகையில் வரும் 21ம் தேதியன்று (திங்கட்கிழமை) வாங்க , மாதவ் காப்பர் உள்ளிட்ட 3 பங்குகளை சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகாடியா பரிந்துரை செய்துள்ளார்.

1.மாதவ் காப்பர் லிமிடெட்
மாதவ் காப்பர் லிமிடெட் நிறுவனம் காப்பர் ஃபேப்ரிகேட்டட் தயாரிப்பு மற்றும் முறுக்கு கம்பிகளின் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 9.23 சதவீதம் உயர்ந்து ரூ.50.99ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.50.80 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.54.50 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.48.50 ஆகும்.
2. பாலாஜி டெலிஃபிலிம்ஸ்
ஊடக துறையை சேர்ந்த நிறுவனம் பாலாஜி டெலிஃபிலிம்ஸ். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.15 சதவீதம் உயர்ந்து ரூ.81.89ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.82.48 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.88.50 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், ரிஸ்க்கை திறம்பட நிர்வகிக்க இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.79.50ஆக கணிக்கப்பட்டுள்ளது.
3. விசா ஸ்டீல் லிமிடெட்
கனிமங்கள் மற்றும் உலோகங்கள் துறையை சேர்ந்த நிறுவனம் விசா ஸ்டீல். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.34 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.34.50ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.35.50 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.38.50ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வேளை பங்கின் விலை இறங்கினால் வெளியேறிய வேண்டிய விலையான ஸ்டாப் லாஸ் ரூ.34.50ஆக கணிக்கப்பட்டுள்ளது என்று சுமீத் பகாடியா தெரிவித்துள்ளார். இன்ட்ராடே வர்த்தகர்கள் செய்பவர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும்.
போதும் இதோடு நிப்பாட்டுங்க... அன்னிய முதலீட்டாளர்களுக்கு செக் வைச்ச சோமெட்டோ
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications