தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலி: சர்ரென சரிந்தது சன் டிவி பங்கு மதிப்பு..!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்ற திமுக படிப்படியாக சரிந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி பார்க்கும் போது 107 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 72 தொகுதிகளில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது . திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இது சன் டிவி நிறுவன பங்குகளில் மிக வலுவாக எதிரொலித்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலி: சர்ரென சரிந்தது சன் டிவி பங்கு மதிப்பு..!!

சன் டிவி நெட்வொர்க்குக்கு சொந்தமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு காலை வர்த்தகம் தொடங்கும் போது 611 ரூபாயாக இருந்தது. தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிராக மாறி வரும் நிலையில் படிப்படியாக இந்நிறுவன பங்குகள் சரிந்து ஒரு பங்கு மதிப்பு 550 ரூபாய் என கிட்டத்தட்ட. 9 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஒரே நாளில் சன் டிவி நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் ஒன்பது சதவீதம் சரிவடைந்திருப்பது அதில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read

திமுகவை சேர்ந்த கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவி நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் இவ்வளவு குறைவை சந்தித்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பிலும் சுமார் 21,500 கோடி ரூபாய் குறைந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் கிடைத்த லாபம் அனைத்தையும் இழந்து முதலீட்டாளர்கள் தற்போது தத்தளித்து வருகின்றனர்.

Recommended For You

சன் டிவி நெட்வொர்க் திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஒரு ஊடக நிறுவனமாகும். அவருடைய சகோதரர் தயாநிதி மாறன் திமுக எம்பி - ஆக இருக்கிறார். அவருடைய தந்தை மறைந்த முரசொலி மாறன் திமுகவில் அசைக்க முடியாத நபராக இருந்தவர். சென்னை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 37க்கும் அதிகமான டிவி சேனல்களை ஏழு மொழிகளில் செயல்படுத்தி வருகிறது. 69 ரேடியோ நிலையங்கள் ,மற்றும் செய்தித்தாள்கள் ஓடிடி பிளாட்பார்ம்களை நடத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியும் சொந்தமாக கொண்டு இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு சன் டிவி குழும பங்குகளில் எதிரொலித்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+