Live
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் Live Updates: தமிழ்நாடெங்கும் ஒலிக்கும் விசில் சத்தம்!! சாதித்த தவெக!!

தமிழ்நாடு சட்டசபையில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் மொத்தம் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதுமட்டுமில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாரம்பரியமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரக்கூடிய திமுக ,அதிமுக இரண்டிற்கும் ஒரு சவாலாக தமிழக வெற்றி கழகம் உருவெடுக்குமா என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல போகும் செய்தியாக இருக்கும்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் Live Updates: தமிழ்நாடெங்கும் ஒலிக்கும் விசில் சத்தம்!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் அளித்த தபால் வாக்குகள் எண்ணப்படும். அந்த முடிவுகளை அதிகாரிகள் வெளியிடுவார்கள். அதன் பிறகு தான் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி இருக்கக்கூடிய வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+