தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. 10.30 மணி நிலவரப்படி 104 தொகுதிகளில் விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு எல்லாம் தவெக வேட்பாளர்கள் டஃப் பைட் கொடுப்பது முதல் கட்ட தேர்தல் முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரிய வருகிறது. அதிமுக 78 இடங்களிலும், திமுக கூட்டணி 51 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. நாம் தமிழர் கட்சி சீமான் போட்டியிடும் காரைக்குடி உட்பட எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பு பலிக்கிறதா என்ற கேள்வ்இ எழுகிறது. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கணிப்புகள் திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கூறிய நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் விஜய் -இன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என கணித்தது.
ஆக்சிஸ் மை இந்தியா தமிழக வெற்றி கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும், திமுக 92 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே பெறும் என்றும் கூறப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்களில் தான் வெற்றி பெறும் எனவும் அந்த கணிப்பு கூறியது.
ஆக்சிஸ் மை இந்தியாவின் இந்த கணிப்பு பெரும் விவாதத்தை எழுப்பியது. முதல்முறையாக போட்டியிடும் ஒரு கட்சி எப்படி ஆட்சி அமைக்கும், உங்கள் சர்வே நம்பகத்தன்மை கொண்டதா என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் முன்னிலை நிலவரங்கள் இந்நிறுவன கணிப்புக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.
முதல் சுற்று முடிவுகளில் திமுக முதலிடத்திலும் அதிமுக இரண்டாமிடத்திலும் தவெக மூன்றாமிடத்திலும் இருந்தன. தபால் வாக்குகள் முடிவிலேயே தவெக வேகமாக முன்னேற தொடங்கியது. பின்னர் படிப்படியாக முன்னேறி தவெக 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றது. திமுக, அதிமுகவை தவெக பின்னுக்கு தள்ளியது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. ஆக்சிஸ் மை இந்தியா 2021 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அதிக அளவில் கணித்திருந்தது. அதேபோல் திமுக 133 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. எனவே இந்த தேர்தலிலும் ஆக்ஸிஸ் மை இந்தியா கணிப்பின்படி தான் முன்னிலை நிலவரங்கள் அமைந்துள்ளன.
விஜய் பெரம்பூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஸ்டாலின் கொளத்தூரிலேயே பின்னடைவை பெற்றார். காரைக்குடியில் சீமான் பின்னடைவிலேயே இருக்கிறார். எனவே தமிழ்நாடு அரசியல் புதிய மாற்றத்திற்கு தயாராகி வருவதையே முன்னிலை நிலவரங்கள் காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications

