இந்திய பங்குச் சந்தை இன்று பெரும் சரிவை சந்தித்ததுள்ளது. காலை முதல் ஐடி பங்குகள் வீழ்ச்சி காரணமாக தடுமாறி வந்த நிலையில், மதிய வர்த்தகத்தில் பெரும்பாலான துறைகளின் பங்குகள் சரிந்தது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 1,048 புள்ளிகள் (1.25%) சரிந்து 82,627-ல் முடிந்தது. சென்செக்ஸ் அதிகப்படியாக 82,534.55 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. நிஃப்டி 50 குறியீடு 336 புள்ளிகள் (1.32%) இழந்து 25,471-ல் முடிந்தது. நிஃப்டி அதிகப்படியாக 25,444.30 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 7.4 லட்சம் கோடி ரூபாய் குறைந்ததுள்ளது. இதன் மூலம் மொத்த மார்க்கெட் கேப் 465 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழே இறங்கியது.

இன்றைய சரிவுக்கு 4 முக்கிய காரணங்கள் சந்தை வல்லுனர்கள் பட்டியலிடுகின்றனர். மேலும் எப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியாக இப்போதெல்லாம் பங்குச்சந்தை நேரம் சரியில்லை என்ற எண்ணம் இருந்து வரும் வேளையில், இன்றும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
முதல் காரணம் - IT துறையில் தீவிர விற்பனை
ஐடி பங்குகள் இரண்டு நாட்களாக கடுமையாக சரிந்து வருகின்றன. Infosys, Wipro ADRs அமெரிக்காவில் நேற்று 10% வரை வீழ்ச்சியடைந்தன் எதிரொலியாக இந்தியாவில் Nifty IT இன்டெக்ஸ் காலையில் 4.5% சரிந்து வர்த்தக நாள் முடிவில் 1.5% குறைந்தது.
இதன் மூலம் TCS, Infosys, Wipro, Tech Mahindra, HCLTech, Mphasis உள்ளிட்ட நிறுவனங்கள் 2.5% வரை இழந்தன. இந்த சரிவுக்கு முழுக்க முழு காரணம் ஏஐ சேவைகளின் ஆதிக்கம் தான்.
இரண்டாவது காரணம் - உலக சந்தைகளின் பலவீனம்
அமெரிக்க சந்தை வியாழக்கிழமை கடுமையாக சரிந்தது. Nasdaq 2%, S&P 500 1.57%, Dow Jones 1.34% இழந்தன. AI அச்சம் மற்றும் அமெரிக்காவின் ஜனவரி மாத பணவீக்க தரவு எதிர்பார்ப்பு காரணமாக சர்வதேச சந்தைகள் சரிவில் இருந்தது. இதன் செயின் ரியாக்ஷனாக இந்திய பங்குச்சந்தையும் பாதித்துள்ளது.
ஆசிய சந்தையில் ஜப்பாந் நிக்கி 1.21%, ஹாங்காங் நாட்டின் Hang Seng 1.7% சரிந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான நிலையில் வர்த்தகமாகின்றன.
மூன்றாவது காரணம் - டாலர் வலிமை, ரூபாய் பலவீனம்
இன்றைய நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 90.64-ல் நிலைத்தது நிற்கிறது. டாலர் மூன்று நாட்களாக வலுவடைந்து 96.95-ஐ எட்டியது. டாலர் வலுவடைவது என்பது உலக நாடுகளில் இருக்கும் முதலீடுகள் மீண்டும் அமெரிக்காவுக்கு இழுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது காரணம்- நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றம்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் சந்தையை ஆட்டிப்படைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று எச்சரித்துள்ளார். இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை ஈரான் கடன் பகுதிக்கு அனுப்புவது பற்றியும் பேசியுள்ளார். ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் பதற்றம் குறையவில்லை.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications