புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை சேர்ந்த நிறுவனம் சுஸ்லான் எனர்ஜி. பங்குச் சந்தையில் தற்போது அதிகம் பேசப்படும் பங்குகளில் ஒன்றாக சுஸ்லான் எனர்ஜி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்து வருவதே இதற்கு காரணம்.இந்நிறுவன பங்கின் விலை ஒரு காலத்தில் உச்சத்தை தொட்டு பின்பு தரை தட்டியது.
2008ல் ரூ.459 என்ற உச்சத்தை தொட்ட சுஸ்லான் பங்கு 2020ல் ரூ.1.58க்கு வீழ்ந்தது. இருப்பினும் குதிரை போல் வீழ்ந்த வேகத்தில் எழுந்து ஓட (உயர) தொடங்கி விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. நடப்பு ஏப்ரல் மாதத்தில் முதலீட்டாளர்கள் சுஸ்லான் எனர்ஜி பங்குகளை அதிகளவில் வாங்கி குவித்தனர். இதனால் இந்நிறுவன பங்கின் விலை சிறிது ஏற்றம் கண்டது.

இந்நிலையில், நேற்றைய பங்குச் சந்தையின் வீழ்ச்சியால், சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை அதன் மாதாந்திர லாபத்தில் பெரும்பாலானவற்றை சமன் செய்தது. அதாவது ஏறிய பங்கு விலை குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை அதன் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.06 சதவீதம் குறைந்து ரூ.58.29ஆக இருந்தது.
இருப்பினும் இப்போதும் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.37.95ஐ காட்டிலும் 53 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சுஸ்லான் எனர்ஜி பங்கை விலை குறைய குறைய வாங்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், நடுத்தர கால அளவில் சுஸ்லான் பங்கு விலை ரூ.70ஐ தொடக்கூடும்.
சுஸ்லான் பங்குகளில் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள், "பை ஆன் டிப்ஸ்" (விலை குறைய குறைய வாங்குவது) உத்தியை பின்பற்ற வேண்டும். சுஸ்லான் பங்கின் விலையில் ஏற்படும் எந்தவொரு சரிவும், ரூ.51 அளவில் வாங்கும் வாய்ப்பாக கருதப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
சுஸ்லான் எனர்ஜி பங்கு குறித்து எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவா கூறுகையில், சுஸ்லானின் பங்கு விலை ரூ.61.50 மண்டலத்தை சுற்றி தடைகளை எதிர்கொள்கிறது. இருப்பினும் சுஸ்லான் பங்கின் நடுத்தர கால எதிர்பார்ப்பு ஏற்றத்துடன் உள்ளது, சப்போர்ட் பகுதி உறுதியாக இருந்தால், ரூ.70ஐ சுற்றி இலக்கு நிலைகளை அடையும் திறன் உள்ளது என்று தெரிவித்தார்.
குறைந்த விலையில் பங்குகளை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வரும் திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தை மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கும்போது,? கவனிக்க வேண்டிய பங்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
அட எப்படி பார்த்தாலும் லாபம்தான்...குஷியில் ஜென்சார் டெக்னாலஜிஸ் முதலீட்டாளர்கள்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications