மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனம் ஸ்வராஜ் என்ஜின்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் மகிந்திராவின் ஸ்வராஜ் டிராக்டர்களுக்கான டீசல் என்ஜின்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் 20 எச்பி முதல் 65 எச்பி வரையிலான டீசல் என்ஜின்களை சப்ளை செய்கிறது. ஸ்வராஜ் என்ஜின்ஸ் நிறுவனம் 1989-90ல் தனது உற்பத்தியை தொடங்கியது. அதுமுதல் இதுவரை இந்நிறுவனம் ஸ்வராஜ் டிராக்டர்களுக்கு 15.9 லட்சம் என்ஜின்களை சப்ளை செய்துள்ளது.
ஸ்வராஜ் என்ஜின்ஸ் லிமிடெட் அண்மையில் தனது 2025 மார்ச் காலாண்டுக்கான தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. மேலும் அதனுடன் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டும் அறிவித்தது. இந்நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.45.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும். 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 29.4 சதவீதம் உயர்ந்து ரூ.454 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பங்கு ஒன்றுக்கு ரூ.104.50 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. அதேசமயம் இது நிறுவனத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது. நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்டால், டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு 2025 ஜூன் 27ம் தேதியை பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 2025 ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ளது என்று ஸ்வராஸ் என்ஜின்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்வராஜ் என்ஜின் லிமிடெட் நிறுவனத்தின் டிவிடெண்ட் அறிவிப்பால் பங்குதாரர்கள் லாபம் அடைவார்கள். இருப்பினும் அதிக லாபம் அடைய போவது மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம்தான். இந்நிறுவனத்தில் 52.12 சதவீதம் அல்லது 63.31 லட்சம் பங்குகளை மகிந்திரா நிறுவனம் கொண்டுள்ளது. இந்த டிவிடெண்ட் அறிவிப்பால் மகிந்திரா நிறுவனத்துக்கு சுளையாக ரூ.66.16 கோடி கிடைக்கும்.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தக் நிறைவடைந்தபோது, ஸ்வராஜ் என்ஜின்ஸ் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.29 சதவீதம் குறைந்து ரூ.4,137.20ஆக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்த பங்குகளில் இந்நிறுவன பங்கு ஒன்றாகும். கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 190.16 சதவீதம் பெருக்கியுள்ளது.
கடந்த ஆண்டில் ஸ்வராஜ் என்ஜின்ஸ் பங்கின் விலை 70.78 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 40.11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications