இந்திய பங்குச்சந்தையில் இன்று முதல் (மார்ச் 28, 2024) வேகமான பரிவர்த்தனை முறை (Shorter Settlement Cycle) அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஓரே நாளில் பரிவர்த்தனையை முடிக்கும் T+0 Settlement முறையைச் செயல்படுத்தும் வெகுசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.
முழுமையான அமலாக்கம் செய்வதற்கு முன்பாக, இந்த புதிய T+0 Settlement முறையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், வழக்கம் போல் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன் படி T+0 Settlement முறையின் "பீட்டா டெஸ்டிங்" (Beta Version) இன்று காலை துவங்கப்பட உள்ளது. இது வெற்றி அடையும் பட்சத்தில் பிற நிறுவனங்களுக்கும், சேவைகளுக்கும் T+0 Settlement முறை கொண்டு வரப்படும்.
T+0 முறை என்றால் என்ன?: T+0 முறை என்பது பங்குச்சந்தையில் செய்யப்படும் பரிவர்த்தனையை அதே நாளில் முதலீட்டாளர்களுக்கு செட்டில் செய்வது, அதாவது பங்குகள் டெலிவரி செய்வது, விற்கப்படும் பங்குகளின் பணத்தை டெபாசிட் செய்வது ஆகியவை இதில் அடங்கும். இதில் T என்பது பரிவர்த்தனை நாள், 0 என்பது செட்டில் செய்ய தேவைப்படும் நாள்.
இந்தியாவில் T+2, T+1 போன்ற செட்டில்மென்ட் முறை தான் இதுநாள் வரையில் இருந்தது. செபி இதை மேம்படுத்தி, உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த T+0 முறையைக் கொண்டு வந்துள்ளது.
இந்த T+0 முறையில் கீழ் பங்குகள் வாங்குபவரின் கணக்கிற்குப் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்ட அதே நாளில் மாற்றப்பட்டும், இதேபோல் பங்குகள் விற்பவர் கணக்கில் அதே நாளில் பணம் டெபாசிட் செய்யப்படும். தற்போது, இந்திய பங்குச்சந்தையில் T+1 முறை பின்பற்றப்படுகிறது. இதனால் பங்குகளோ, பணமோ அடுத்த நாளில் டெபாசிட் செய்யப்படும்.
பீட்டா வெர்ஷன்: செபி அமைப்பு இந்த T+0 முறையை பரிசோதனை திட்டமாக செயல்படுத்த உள்ளது. இந்த பீட்டா வெர்ஷன் பரிசோதனை திட்டத்தின் கீழ், 25 பங்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ப்ரோக்கர்கள் மூலமாகவே வழங்கப்படும். மேலும், T+0 முறையில் பரிவர்த்தனை செய்யும் பங்குகளுக்கான வர்த்தக நேரம் காலை 9:15 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மட்டுமே இருக்கும்.
தேர்வு செய்யப்பட்ட 25 நிறுவனங்கள்: அம்புஜா சிமெண்ட்ஸ், அசோக் லேலண்ட், பஜாஜ் ஆட்டோ, பாங்க் ஆஃப் பரோடா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பிர்லாசாஃப்ட், சிப்லா, கோபோர்ஜ், திவிஸ் லாபரேட்டரி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் ஹோட்டல், JSW ஸ்டீல், LIC ஹவுசிங் ஃபைனான்ஸ், LTI மைண்ட்ட்ரீ எம்ஆர்எஃப், நெஸ்லே இந்தியா, என்எம்டிசி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், பெட்ரோனெட் எல்என்ஜி, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா கம்யூனிகேஷன்ஸ், டிரென்ட், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, வேதாந்தா
புதிய முறை எவ்வாறு உதவும்?: T+0 செட்டில்மென்ட் முறை முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது, பங்குகள் விற்பனை செய்யப்படும் பணம் அதே நாளில் பணம் கிடைப்பதால், முதலீட்டாளர்களின் பணப்புழக்கம் அதிகரித்து, வர்த்தகர்கள் பணத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
More From GoodReturns

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications