2021 செப்டம்பர் 24ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் முதல் முறையாக 60,000 புள்ளிகளை தொட்டது. அது முதல் இதுவரையிலான கடந்த 2.2 ஆண்டுகளில் சென்செக்ஸ் சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த காலத்தில் பங்குகளின் விலை உயர்வால் முதலீட்டாளர்களின் செல்வத்தை பெரிய வர்த்தக குழுமங்கள் பெருக்கியுள்ளன. அப்படி அதிக செல்வத்தை உருவாக்கிய பெரிய வர்த்தக குழுமங்களில் டாடா முதலில் இடத்தில் உள்ளது.

டாடா குழுமம் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடி அதிகரித்துள்ளது, இது கிட்டத்தட்ட 25 சதவீத கூடுதல் முதலீட்டு மதிப்பாகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டாடாவின் 26 நிறுவனங்களில், அதிகபட்சமாக டாடா இன்வென்ஸ்மென்ட் கார்ப்பரேஷன் பங்கு விலை 227 சதவீதம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்துள்ளது.
அடுத்ததாக கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் உள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 10 நிறுவனங்கள் மொத்தம் ரூ.4.3 லட்சம் கோடியை சேர்த்துள்ளன. இது 42 சதவீதம் கூடுதல் லாபமாகும்.
ஹிண்டன்பர்க் அறிக்கை பெரிய புயலை கிளப்பியபோதிலும், இந்த காலத்தில் ஒரு பெரிய செல்வத்தை உருவாக்குபவராக அதானி குழுமம் விளங்கியது. இந்த குழுமத்தை சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் எதிர்மறையான வருமானத்தை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமத்தில் அதானி பவர் நிறுவன பங்கு 5 மடங்குக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பெரிய செல்வத்தை உருவாக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சுனில் மிட்டலின் பார்தி குழுமம் மற்றும் முருகப்பா குழுமம் முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன.
முருகப்பா குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 9 நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் செல்வத்தை ரூ.1.8 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இது 119 சதவீத லாபமாகும். முருகப்பா குழுமம் 2020ல் சி.ஜி. பவர் நிறுவனத்தை கையகப்படுத்தியது. நிதி இல்லாமல் தத்தளித்த சி.ஜி. பவர் நிறுவனத்தை திருப்பி, கடனற்றதாக மாற்றியது மற்றும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டுடன் வெகுமதியும் அளித்தது. கடந்த 2.2 ஆண்டுகளில் சி.ஜி. பவர் பங்கு 375 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.54,000 கோடி சேர்த்தது.
5வது இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளது. அதேசமயம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் குழும நிறுவனங்கள் சென்செக்ஸை காட்டிலும் குறைவான ஆதாயத்தையே அளித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 2 சதவீதமும், பஜாஜ் குழுமம் 6 சதவீதமும் ஆதாயம் அளித்துள்ளன. இது தவிர வேணு சீனிவாசனின் டி.வி.எஸ். குழுமம் மற்றும் ரவி ஜெய்புரியா குழுமம் ஆகியவை 100 சதவீதத்துக்கு மேல் செல்வதை பெருக்கியுள்ளன.
கடைசியாக Varun Beverages 226 சதவீத லாபத்தையும், Devyani International 204 முதலீட்டு ஆதாயத்தையும் கொடுத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications