டாடா குழுமம்: பொதுவாக இந்திய முதன்மை சந்தை ஆனது பெரும்பாலான நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு அதிக ஐபிஓ வெளியிடப்பட்டு வருகிறது. 2024-ல் இதுவரை 317 ஐபிஓ-க்களுடன் ரூ.1.8 டிரில்லியன் ஐபிஓ வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டை விட சுமார் 2.6 மடங்கு அதிகரிப்பாகும். இந்த நிலையில், சமீபத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஐபிஓவை வெளியிட்டன. அந்த வகையில், டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா கேபிட்டல் அதன் ஐபிஓவை வெளியிட முடிவெடுத்துள்ளது. இந்த ஐபிஓ ஆனது சுமார் 2 பில்லியன் வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டாடா குழுமம் சமீபத்தில் கோடக் முதலீட்டு வங்கி அதிகாரிகளுக்கு ஒரு கூட்டத்திற்குப் பிறகு ஐபிஓ செயல்முறையைத் தொடங்க அனுமதி வழங்கியது என்று கூறப்படுகிறது. அதேபோல், ஜனவரி மாதத்திற்குள் கூடுதல் வங்கியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி, டாடா சன்ஸ் மற்றும் டாடா கேபிடல் ஆகியவை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை வரும் செப்டம்பர் 2025க்குள் தங்கள் பங்குகளை பட்டியலிட வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. தற்போது டாடா கேபிடல்லின் 93% பங்குகளை டாடா சன்ஸ் வைத்திருக்கிறது. இந்த ஐபிஓ வெளியிடப்படும் நிலையில், டாடா குழுமத்தின் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான டாடா டெக்னாலஜிஸ் பம்பர் பட்டியலைத் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களில் டாடா குழுமத்தின் இரண்டாவது ஐபிஓ இதுவாகும்.
டாடா குழுமத்தின் முந்தைய ஐபிஓ டிசிஎஸ் 2004இல் ரூ. 5,500 கோடி சலுகையை அறிமுகப்படுத்தியது. டாடா கேபிட்டலின் பட்டியலிடப்படாத பங்குகள், கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.450-லிருந்து ஏப்ரலில் ரூ.1,100 ஆக உயர்ந்து, தற்போது பட்டியலிடப்படாத சந்தையில் ரூ.900-க்கு விற்பனையாகிறது.
இந்த விலையில், பட்டியலிடப்படாத சந்தையானது, 2024 நிதியாண்டின் இறுதிக்குள் நிலுவையில் உள்ள 3.74 பில்லியன் பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் மதிப்பை ரூ.3.5 லட்சம் கோடியாக மதிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 2022 இல், ரிசர்வ் வங்கி டாடா கேபிட்டல் ஃபைனான்சியல் சர்வீசஸ் மேல் அடுக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனமாக வகைப்படுத்தியது. இந்த வகைப்பாடு மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகளை ஏற்றுக்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குள் பட்டியலிடுவதை கட்டாயமாக்குகிறது.
டாடா கேபிடல் என்பது குழுமத்தின் மூன்று கடன் வணிகங்களுக்கான ஹோல்டிங் நிறுவனமாகும். டாடா கேபிடல் ஃபைனான்ஸ் சர்வீசஸ், டாடா கேபிடல் ஹவுசிங் ஃபைனான்ஸ், மற்றும் டாடா கிளீண்டெக் கேபிடல் மற்றும் மூன்று முதலீடு மற்றும் ஆலோசனை வணிகங்கள் டாடா செக்யூரிட்டீஸ், டாடா கேபிடல் சிங்கப்பூர் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி ஆகியவை கொண்டுள்ளன.
டாடா கேபிடல் டாடா குழுமத்திற்கு முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. ஏனெனில் இது அதன் சப்ளையர்கள், விற்பனையாளர்கள் மற்றும் டீலர்கள் போன்ற குழுமத்துடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் நிதி தேவைகளை செய்து வருகிறது. மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த ஆண்டில், டாடா கேபிடல் 18,178 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது 2023ஆம் நிதியாண்டை விட 34% அதிகமாகும். நிறுவனம் 3,315 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது 2023 நிதியாண்டு லாபத்தை விட 12% அதிகமாகும். மார்ச் 31, 2024 நிலவரப்படி இதன் நிகர மதிப்பு ரூ. 23,417 கோடியாகும். 2023ஆம் நிதியாண்டில் டாடா கேபிடல் உரிமை வெளியீட்டின் மூலம் ரூ. 593.80 கோடியை ஒரு பங்கிற்கு ரூ. 125.10க்கு வழங்கியது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications