இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனையில் மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் அதிக லாபம் கொடுத்த நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் முதலீட்டாளர்களின் கவனமும் டாடா மோட்டார்ஸ் மீது திரும்பியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 52 வார உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது, இன்று அதிகப்படியாக 6% உயர்ந்து ரூ. 802.6 ரூபாய் அளவீட்டைத் தொட்டது. ஆனால் வர்த்தக முடிவில் 3.52 சதவீத உயர்வுடன் 780.75 ரூபாய்க்கு முடிந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் கடைசி வரத்தக நாளான இன்று, டாடா மோட்டார்ஸ் பங்குகள் இந்த வருடம் 101.17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டுப் பங்கு முதலீட்டாளர்கள் டாடா மோட்டார்ஸ் பங்குகளில் 10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 20200 ரூபாய்க் கிடைத்திருக்கும்.
இன்றைய வர்த்தக முடிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2.86 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்று உள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னோடியாக உள்ளது டாடா மோட்டார்ஸ், அனைத்து முன்னணி பிராண்டுகளும் காஸ்ட்லியான கார்களை விற்பனை செய்து வரும் வேளையில் டாடா மோட்டார்ஸ் சரியான விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து பல EV மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
எலக்ட்ரிக் கார்கள் விற்பனை தாண்டி டாடா நெக்சான் மாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற காரணத்தால் பெட்ரோல் கார்களும் விற்பனை அதிகரித்துள்ளது.
மறுமுனையில் அடுத்த ஏழு ஆண்டுகளில் 800,000 டீசல் பேருந்துகளை, சாலையில் நீக்கிவிட்டு மூன்றில் ஒரு பங்கை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் வர்த்தக வாய்ப்பும் உள்ளது.
இதேவேளையில் டாடா குழுமத்தின் வர்த்தக மற்றும் கனரக வாகனங்களின் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இது அனைத்தும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீடு செய்யத் தூண்டியுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டிலும் இந்த வளர்ச்சிப் பாதை தொடரும் என அதிகளவில் நம்பப்படுகிறது, இதற்கு முக்கியக் காரணம் ஏற்கனவே கூறியபடி எலக்ட்ரிக் பஸ் வர்த்தகம் மற்றும் புதிய கார்களின் அறிமுகம் கட்டாயம் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications