டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட். இந்நிறுவனம் சமீபகாலமாக தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. இருப்பினும் டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவன பங்குக்கு ஒரு கிரேஸ் உள்ளது. பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இந்நிறுவனம் இடம் பிடித்துள்ளது.
பங்கின் விலை
பங்குச் சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் பங்கு விலை உயர்ந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.79.50 வரை உயர்ந்தது. இந்த விலையின்படி, இரண்டே தினங்களில் (மே 21,22) இந்நிறுவன பங்கு 35 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளது.

டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் பங்கு விலையின் திடீர் ஏற்றத்துக்கு பின்னணியில், டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் புதிய முதலீடு மேற்கொள்ளும் என்ற தகவல் உள்ளது. டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) மற்றும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய பிற சட்டப்பூர்வ நிலுவை தொகையாக மொத்தம் ரூ.19,256 கோடி பொறுப்கை கொண்டுள்ளது.
புதிய முதலீடு
2026 மார்ச் மாதத்துக்குள் ரூ.19,256 கோடியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் டாடா டெலிசர்வீசஸ் உள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் புதிய முதலீடு மேற்கொள்ளும் என்ற தகவல் வெளியானது. இதுதான் டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் பங்கின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆய்வாளர் மூத்த மேலாளர் ஜிகர் எஸ் படேல் கூறுகையில், டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் பங்கின் சப்போர்ட் விலை ரூ.74 ஆகவும், ரெசிஸ்டன்ஸ் விலை ரூ.80 ஆகவும் இருக்கும். இப்பங்கின் விலை ரூ.80ஐ தாண்டினால், ரூ.84 நோக்கி மேலும் உயரக் கூடும். குறுகிய காலத்தில், இப்பங்கின் விலை ரூ.70 முதல் ரூ.84 வரை என்ற வர்த்தக வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
சரிவு
2024 ஜூலை 19ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.11.48ஐ எட்டியது. ஆனால அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.50.01க்கு சென்றது.
மோசமாகும் அமெரிக்க நிலவரம்.. விறுவிறுவென சரிந்த இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி பங்குகள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications