இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை அமெரிக்காவிலிருந்து பெறுகின்றன. இதனால் அமெரிக்க நிதி மற்றும் பொருளாதார ஆரோக்கியம் குறித்த கவலைகள் ஐடி நிறுவனங்களின் வணிக வாய்ப்புகளை பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அமெரிக்கா பொருளதாரம் தொடர்பான எந்தவொரு எதிர்மறையான தகவலும் இந்திய ஐடி நிறுவன பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிதிப் பற்றாக்குறை
தற்போது அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற கவலைகளால் இந்திய பங்குச் சந்தையில் டெக் மகிந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி துறையை சேர்ந்த பங்குகளின் விலை சரிந்தன.

அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் தற்போது வரி குறைப்புகளை உள்ளடக்கிய ஒரு புதிய பட்ஜெட் முன்மொழிவை இறுதி செய்து வருகின்றனர். இருப்பினும் வரி விலக்குகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளும் இந்த பட்ஜெட், அந்நாட்டின் நிதிப்பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள்.
தாக்கம்
இதன் காரணமாக நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி சரிவுடன் தொடங்கியது. வர்த்தகத்தின தொடக்கத்தில் நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் சுமார் 1.4 சதவீதம் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இன்போசிஸ் பங்கின் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.1,544 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டெக்மகிந்திரா பங்கின் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதம் குறைந்து ரூ.1,558.90 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டிசிஎஸ் பங்கின் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதததுக்கு மேல் குறைந்து ரூ.3,460 வரை வீழ்ச்சி கண்டது.
எச்சிஎல்
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதம் குறைந்து ரூ.1,637.80க்கு சென்றது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே எம்ஃபாசிஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.2,503.40 வரை சரிந்தது.
அண்மையில் மூடிஸ் நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் கடன் மதிப்பீட்டை ஏஏஏ-லிருந்து ஏஏ1ஆக குறைத்தது. அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை மற்றும் உயர்ந்த வட்டி விகிதங்களுக்கு மத்தியில் ஏற்கனவே உள்ள கடனை மறுநிதியளிப்பதில் உள்ள சிரமம் ஆகியவை அதன் தரக் குறைப்புக்கான காரணங்களாகக் குறிப்பிட்டது. இதனையடுத்து அப்போதும் ஐடி பங்குகள் விலை சரிந்தன.
ஐடி துறை
மிரே அசெட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் இன்வெஸ்ட் இந்தியா மாநாடு 2025 நிகழ்ச்சியில் சந்தை நிபுணர் மணிஷ் சோகானி பேசுகையில், ஐடி பங்குகள் வலுவான முதலீட்டாளர் ஆர்வத்தை ஈர்ப்பதால், அவரை தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். இந்தியாவை பொறுத்தவரை ஐடி துறை முக்கியமானது. சவுதி அரேபியாவுக்கு எண்ணெய் எப்படி இருந்தது அதுபோல் இந்தியாவுக்கு ஐடி என்று தெரிவித்தார்.
லோன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. உங்க ஈஎம்ஐ குறையப்போகுது.. RBI முக்கிய முடிவு.. விரைவில்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications