டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் ஆஃபருக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளதாகத் திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையில் டிசிஎஸ் அறிவித்தது.
இந்தியாவில் இருந்து மென்பொருள் ஏற்றுமதியில் தலை சிறந்த நிறுவனமான டிசிஎஸ் இந்தப் பை பேக் ஆஃபர் மே 18 முதல் மே 31 வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் இந்தப் பை பேக் திட்டத்தின் மூலம் 3 சதவீத பங்குகள் அதாவது 56 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை 2,850 ரூபாய் ஒரு பங்கு என்று வாங்க முடிவு செய்துள்ளது.
திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் டிசிஎஸ் நிறுவனத்துடைய ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ. 2,364.05 பைசாவாக 0.19 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications