மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனமுமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தொலைத்தொடர்பு துறையிடமிருந்து (டிஓடி) ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை இந்நிறுவனம் பெற்றுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 700 எம்எச்இசட் மற்றும் 3,300 எம்எச்இசட் போன்ற பிரீமியம் ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தொலைத்தொடர்பு துறை ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதற்கு முன், டெல்லியில் தொடங்கி, குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதையடுத்து, இன்று பங்குச் சந்தையில் டாடா குழுமத்தின் தேஜாஸ் நெட்வார்க்ஸ் பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தேஜாஸ் நிறுவனம் ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி/5ஜி RAN உபகரணங்கள் மற்றும் IP/MPLS ரவுட்டர்களை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவை தொடங்கி விரிவுப்படுத்த தொடங்கினால், தேஜாஸ் நிறுவனம் பலன் அடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.902.70 வரை சென்றது. வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை 9.10 சதவீதம் உயர்ந்து ரூ.876.25ல் நிலை கொண்டது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2024 அக்டோபர்-டிசம்பர்) தேஜாஜ் நெட்வொர்க்ஸ் 27,000 தளங்களுக்கு உபகரணங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி/5ஜி நெட்வொர்க்கில் அதன் மொத்த பயன்பாடுகள் 86,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (2024 ஏப்ரல் முதல் டிசம்பர்) தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 94 சதவீதம் இந்தியாவிலிருந்து வந்தது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி தொடர்பான டிசிஎஸ் நிறுவனத்துக்கு உபகரணங்களை அனுப்பியதில் கிடைத்ததாகும். தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.2,642 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.165 கோடி ஈட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர், கடந்த மார்ச் 8ம் தேதி நிலவரப்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தளங்களுக்கான கொள்முதல் ஆர்டர்களை வழங்கியுள்ளது. இதில் 83,993 நிறுவப்பட்டுள்ளது, 74.521 ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ளது. இந்த உபகரணங்கள் முழுமையாக 5ஜிக்கு மேம்படுத்தப்படலாம். என்று தெரிவித்தார். இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications