ஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.!

இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே இறக்கம் இல்லாமல் 0.10 முதல் 0.20 சதவிகித ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வந்த இந்திய சந்தைகள் வர்த்தக நேர முடிவில் இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கிறது.

 நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டி காலை 10,348 க்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 47 புள்ளிகள் குறைந்து 10,301க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி 50யில் இருக்கும் 50 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

சென்செக்ஸ் காலையில் 34,474 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 174 புள்ளிகள் இறக்கம் கண்டு 34,299 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டியில் நடந்தது போலவே சென்செக்ஸிலும் சொல்லி வைத்தது போல 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் மொத்த பங்குகளில் 2,766 பங்குகள் மட்டுமே இன்று வர்த்தகமாயின. அதில் 1,029 பங்குகள் ஏற்றத்திலும், 1585 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் விலை மாற்றம் இன்ரியும் வர்த்தகமாயின.

 ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து தற்போது 74.28 என்கிற புதிய சாதனை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று ரூபாயின் மதிப்பு 73.77 -க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை இறக்கத்தை விட 29 பைசா கூடுதல் சரிவு.

 செய்திக்கு தேதி வேண்டும்

செய்திக்கு தேதி வேண்டும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க கருவூல பாண்டுகளின் வட்டி விகிதம் 3.24 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு பன்னாட்டு நிதியத்தின் (IMF) பொருளாதார கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி 7.4-ல் என்று அறிவிப்பை மறு பரிசீலணை செய்து தற்போது 7.3 ஆக இருக்கலாம் என்று குறைத்துக் சொல்லி இருக்கிறது. இந்த மறு மதிப்பீடு மற்றும் அமெரிக்க பாண்டுகள் வட்டி விகித உயர்வால் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய வாய்ப்பு இருக்கிறதாம். இந்த செய்திகளின் தாக்கல் இன்னும் சில நாட்களுக்கு சந்தைகளில் நீடிக்கலாம் என்று சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

 பறந்த பங்குகள்

பறந்த பங்குகள்

ஆட்டோமொபைல், எனர்ஜி மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பங்குகள் அதிக அளவில் இறக்கம் கண்டன. அதோடு அதானி போர்ட்ஸ், வேதாந்தா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், டைட்டன் போன்ற பங்குகள் அதிக இறக்கம் கண்டு வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

அமெரிக்க சந்தை நேற்று இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்து இருந்தது. அதோடு லண்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. ஆசியச் சந்தைகளில் தைய்வான், இந்தோனேஷியா, சீனா போன்ற சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற ஆசியச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+