சர்பிரைஸ் கொடுக்க போகும் 3 நிறுவனங்கள்.. 550% டூ 600%.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தையில் டிவிடெண்ட் அல்லது ஈவுத்தொகை என்பது பங்கில் இருந்து வரும் வருமானத்தின் பங்கீடு ஆகும். இந்த டிவிடெண்ட் ஆனது சில சமயங்களில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு 2 முறையோ கொடுக்கப்படும்.

 

மொத்தத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியினை பொறுத்து கிடைக்கும் இந்த வருவாய் விகிதமானது, முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமாகும்.

பொதுவாக இந்த டிவிடெண்ட் தொகையானது நிறுவனத்தின் லாபம் மற்றும் இயக்குனர்களின் பரிந்துரையைப் பொறுத்து இருக்கும். ஆக நல்ல லாபகரமான டிவிடெண்ட் தரும் நிறுவனங்களை வாங்குவது முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பினை தரலாம்.

என்னென்ன நிறுவனங்கள்?

என்னென்ன நிறுவனங்கள்?

அப்படி மூன்று பங்குகள் வரும் வாரத்தில் நல்ல வாய்ப்பினை கொடுக்கவுள்ளன. ஒன்று பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன். இஐடி பாரி (இந்தியா), மூன்றாவது டைட் வாட்டர் ஆயில் கோ (இந்தியா) லிமிடெட் ஆகும். இந்த நிறுவனத்தின் டிவிடெண்டினை பெற பங்குதாரர்கள் நிறுவனம் குறிப்பிடும் தேதி பங்குகளை பதிவு செய்திருக்க வேண்டும்.

டைட் வாட்டர் ஆயில் கோ (இந்தியா) லிமிடெட்

டைட் வாட்டர் ஆயில் கோ (இந்தியா) லிமிடெட்

பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் டைட் வாட்டர் ஆயில் கோ (இந்தியா) லிமிடெட் நிறுவனம், நடப்பு ஆண்டிற்கான 600% இடைக்கால டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதன் முகமதிப்பு பங்குக்கு 2 ரூபாயாகும். இதன் பதிவு தேதி நவம்பர் 22, 2022 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதாவது டிசம்பர் 13, 2022க்குள் டிவிடெண்ட் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட் வாட்டர் ஆயில் கோ
 

டைட் வாட்டர் ஆயில் கோ

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 394.06 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 448.02 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதன் கடந்த ஆண்டினை காட்டிலும் 13.69% வளர்ச்சி கண்டுள்ளது. இதே இதன் நிகர லாபம் கடந்த ஆண்டு 32 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 20.43 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் லாபம் குறைந்து இருந்தாலும் அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினையும் கொடுத்துள்ளது.

ஸ்மால் கேப் நிறுவனம்

ஸ்மால் கேப் நிறுவனம்

இதே டைட் வாட்டர் நிறுவனத்தின் இபிஎஸ் விகிதம் 18.83 ரூபாயில் இருந்து, 12.02 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் சந்தை மதிப்பானது 1742.75 கோடி ரூபாயாகும். இது ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் ஆகும். இது எனர்ஜி துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் எனலாம். இந்த நிறுவன பங்கின் விலையானது கடந்த அமர்வில் கடைசியாக 1002 ரூபாயாக முடிவடைந்திருந்தது. நடப்பு ஆண்டில் இப்பங்கின் விலையானது 32.47% சரிவினைக் கண்டுள்ளது.

இஐடி பாரி (இந்தியா)

இஐடி பாரி (இந்தியா)

இஐடி பாரி (இந்தியா) பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நிறுவனம் இந்த நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்ட்ஃபாக ஒரு பங்குக்கு 5.50 ரூபாயினை அறிவித்துள்ளது. இது 550% ஆகும். இந்த பங்கின் முகமதிப்பு 1 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் ரெக்கார்டு தேதி நவம்பர் 23,2022 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிடெண்ட் தொகையானது டிசம்பர் 6, 2022க்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஐடி பாரி (இந்தியா) வருமானம் எப்படி?

இஐடி பாரி (இந்தியா) வருமானம் எப்படி?

இஐடி பாரி (இந்தியா)நிறுவனத்தின் விற்பனை விகிதமானது செப்டம்பர் 2022 காலாண்டில் 6978.41 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு செப்டம்பர் காலாண்டில் 2022ல் 11,327.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 62.32% ஆக குறைந்துள்ளது. இதன் நிகர லாபம் 241.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 243.84 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் இபிஎஸ் விகிதம் 13.60 ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 13.77 ரூபாயாக இருந்தது. இதன் நிகர விற்பனைக்ய

 

பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன்

பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன்

பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான சிறப்பு டிவிடெண்டாக 550% அறிவித்துள்ளது. இதன் ரெக்கார்டு தேதி நவம்பர் 25 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் டிவிடெண்ட் தேதியானது நவம்பர் 24, 2022 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 55 ரூபாய் டிடெண்டினை அறிவித்துள்ளது. (இதில் சிறப்பு டிவிடெண்டாக 35 ரூபாய் அடங்கும்) இந்த பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாகும்.

 பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன் வருமானம்?

பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன் வருமானம்?

பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷனின் நிகர விற்பனை விகிதாமது 35% அதிகரித்து, 2089.29 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1547.58 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதன் நிகர லாபம் 115.02 கொடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 19.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 96.04 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் இபிஎஸ் விகிதம் ஒரு பங்குக்கு 36.64 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 30.59 ரூபாயாக இருந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These three stocks paying dividend in big level

Polyplex Corporation. EIT Pari (India) declared dividend of Tide Water Oil Co (India) Ltd. What is the September quarter profit of these companies? Record date that?
Story first published: Sunday, November 20, 2022, 20:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X