மும்பை: இந்தியாவில் ஏற்றுமதி துறையில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்றுமதி துறையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பங்கு இரண்டே ஆண்டுகளில் 800 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. இந்த ஸ்மால் கேப் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
எஸ்பிசி எக்ஸ்போர்ட் லிமிடெட்( SBC Exports Ltd) நிறுவனம் 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காசியாபாத் மற்றும் மிர்சாபூர் பகுதிகளில் உற்பத்தி ஆலைகளை வைத்து நூல் மற்றும் ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் அனைத்து வயதினருக்குமான ஆடைகளை எஸ்பிசி டிசைன் பிளஸ் என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது.

எஸ்பிசி எக்ஸ்போர்ட் நிறுவனத்தை பொருத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் இதன் ஒரு பங்கு மதிப்பு ரூ.3 என்ற அளவில் இருந்தது. தற்போது 810 சதவீதம் இது அதிகரித்து ரூ.31.75 என உயர்ந்துள்ளது. எஸ்பிசி எக்ஸ்போர்ட் நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு ரூ.12 ஆகும். படிப்படியாக உயர்ந்து ரூ.31.75 என அதிகரித்துள்ளது .
2024 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் ஒரு பங்கின் மதிப்பு 60 % உயர்ந்துள்ளது . அண்மையில் இந்த நிறுவனம் தங்களின் அடுத்த ஐந்து ஆண்டு கால திட்டத்தினை வெளியிட்டது. தங்கள் நிறுவன ஆலைகளை விரிவாக்கம் செய்வது மற்றும் ரீடெய்ல் கடைகளை நிறுவுவது ,ஏற்றுமதியை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
நகரப் பகுதிகளில் 50 கடைகளை தொடங்குவது என்றும் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 30 சில்லறை விற்பனை கடைகளை தொடங்குவது என்றும் எஸ்பிசி நிறுவனம் விரிவான திட்டத்தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 128 %, கடந்த ஒரு மாத காலத்தில் 17 % உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். நிறுவன பங்கின் புக் வேல்யூ 1.40 ,பேஸ் வேல்யூ 1 ஆகும். நிறுவனத்தின் வருமானம் என பார்க்கும் போது 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 225 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது .
இதன் லாபம் 2023 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவன பங்குகளில் 64% புரொமோட்டர்களிடம் இருக்கிறது, சில்லறை முதலீட்டாளர்கள் 35 % பங்குகளை கொண்டுள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications