மும்பை: 2021 ஆம் ஆண்டில் 1 ரூபாய்க்கும் கீழ் இருந்த ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 23 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் 2400 % என இதன் மதிப்பு அதிகரித்துள்ளது. ராயல் இந்தியா கார்ப்பரேஷன் என்ற பென்னி ஸ்டாக் தற்போது முதலீட்டாளர்களுக்கு பெருமளவு லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
2024ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இந்த ஐந்து மாதங்களிலுமே ராயல் இந்தியா கார்ப்பரேஷனின் பங்கு மதிப்பானது ஏறு முகத்திலேயே இருக்கிறது. மே மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 45 % உயர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 47%, மார்ச் மாதத்தில் 39%, பிப்ரவரியில் 49 %, ஜனவரியில் 35.6 % என 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இதன் மதிப்பானது கிட்டத்தட்ட 500 % அதிகரித்துள்ளது.
ராயல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தங்க நாணயங்கள் மற்றும் விருதுகள் போன்றவற்றை போன்றவற்றை மொத்த விலையில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் நடராஜ் ஃபைனான்சியல் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் என அறியப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு இது ராயல் இந்தியா கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் தேசிய பங்குச்சந்தையின் கீழ் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் உள்ளது. எனவே இதை அவ்வப்போது அழைப்பு ஏலங்கள் மூலம் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். 2 % விலை வரம்புடன் அனைத்து வர்த்தக நாட்களிலும் வர்த்தகம் செய்யலாம்.
ராயல் இந்தியா நிறுவனம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2024 ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம் 3.74 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதுவே ஓராண்டுக்கு முன்பாக 2023 ஆம் நிதியாண்டில் இது 4 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்தது. தரகு நிறுவனமான ஐசிஐசிஐ டைரக்ட், ராயல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் தற்போது வலுவான வளர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளது.
அண்மையில் கூட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது 52 வார கால உச்சத்தை எட்டியது. மேலும் இந்த நிறுவனம் லாபத்தை ஈர்க்கும் நோக்கில் தங்களது சொத்துக்களை திறமையான முறையில் மேலாண்மை செய்து வருவதாக ஐசிஐசிஐ டைரக்ட் கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் ரிட்டன் ஆஃப் ஏசட்ஸ் மேம்பட்டு வருவதாக ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும் இந்த நிறுவனம் தங்களது வருவாயை விட அதிக அளவு வட்டி செலுத்துகிறது எனவே இதை கவனத்தில் கொள்ள வேண்டும் அதேபோல நிறுவனத்தின் காலாண்டு வருமானம் குறைந்திருக்கிறது அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஐசிஐசிஐ டைரக்ட் கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்குகளில் 54 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களிடமும் 45.92% புரமோட்டோர்கள் வசனம் உள்ளது . இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 56 கோடி ரூபாய் ஆகும் .
Story written by: Devika


Click it and Unblock the Notifications