ஒரு நிறுவனம் தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதே விகிதத்தில் ஒரு பங்கின் விலையை குறைப்பதே பங்கு பிரிப்பாகும். இது முதலீட்டின் மொத்த மதிப்பை மாற்றாது ஆனால் முதலீட்டாளர்கள் முன்பை விட அதிகமான பங்குகளை பெறுவார்கள். சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குகளை மிகவும் மலிவு விலையில் வழங்கவும், சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், அதிக வர்த்தக நடவடிக்கைகளை ஈர்க்கவும் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பிரிக்கின்றன. இந்த வாரம் ஐஓஎல் உள்பட 4 நிறுவனங்கள் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.
மேலும் அந்த நிறுவனங்கள், புதிய சரிசெய்யப்பட்ட பங்கு பிரிப்பு விலையில் பங்கு வர்த்தகம் தொடங்கும் தேதியான எக்ஸ்-பிரிப்பு தேதி மற்றும் பங்கு பிரிப்புக்கு உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதி ஆகியவற்றையும் அறிவித்துள்ளன.

ஐஓஎல் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 11ம் தேதியாக நிர்ணயம் செய்து இருந்தது. இந்நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.2 முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரித்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.64.45ஆக இருந்தது.
மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது. இந்நிறுவனம் எக்ஸ்-பிரிப்பு தேதியை மார்ச் 13ம் தேதியாகவும், பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.137.90ஆக இருந்தது.
ஷாலிமார் ஏஜென்சீஸ் நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது. இந்நிறுவனம் எக்ஸ்-பிரிப்பு தேதியை மார்ச் 13ம் தேதியாகவும், பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.89.10ஆக இருந்தது.
ஷங்கா டெகோர் நிறுவனம் ரூ.5 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்க உள்ளது. இந்நிறுவனம் எக்ஸ்-பிரிப்பு தேதியை மார்ச் 13ம் தேதியாகவும், பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.4.85ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications