தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாய், சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு..!
தொடர் சரிவு பாதையில் இருந்த தங்கம் விலை இன்று ஓரே நாள் வர்த்தகத்தில் 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தையின் தாக்கம் இந்திய சந்தையில் குறைந்தால் மும்பை பங்குச்சந்தையில் இன்று முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்தது. இதன் ஒரு பகுதியாக நாணய சந்தையிலும் முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியது.
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தின் மூலம் தொடர் சரிவு பாதையில் இருந்த தங்கத்தின் விலை இன்று 3000 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் உயர்ந்து 3,000 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 2,855 ரூபாய்க்கும் சென்னையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications