தங்கம் விலை கிராமிற்கு 44 ரூபாய் சரிவு..!
மும்பை பங்குச்சந்தையில் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் இன்று முடிய உள்ளதால், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று அதிகளவிலான சரிவிற்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 68.85 ரூபாய் என்ற வரலாறு காணாத அளவை எட்டிய நிலையில், இந்திய சந்கதையில் இருக்கும் அதிகளவிலான அன்னிய முதலீடு வெளியேறியது.

இதனால் நாணய சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகளவில் சரிந்து காணப்பட்டது.
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 44 ரூபாய் சரிந்து 2,945 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 41 ரூபாய் சரிந்து 2,804 ரூபாய் வரை சரிந்ததுள்ளது.


Click it and Unblock the Notifications