24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் சரிவு..!
சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகளவில் குறைந்து வருகிறது.
இதனால் இந்திய சந்தையில் தங்கம் விலை கடந்த 10 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து சரிவு நிலையிலேயே உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து 2,932.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 3 ரூபாய் குறைந்து 2,804.00 ரூபாய்க்கும் சென்னையில் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications