நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியான முதல் டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நகை கடைகள் சந்தை விலைக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்தது.
இதனையடுத்துச் செய்யப்பட்ட வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் இது உறுதியான நிலையில் சனிக்கிழமை வரை கடந்த 16 நாட்களாக நகை கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெல்லி என்சிஆர், தாரிமா கலான், சாந்தினி சாவ்க் மற்றும் காரோல் பாக் ஆகிய பகுதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை நாட்டின் அனைத்து நகைக்கடைகளும் முழுமையாக இயங்கத் துவங்கிய நிலையில் தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது.
திங்கட்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் உயர்ந்து 2,954 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 2,822 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது.


Click it and Unblock the Notifications