டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் வருமான வரித் துறையினரின் சோதனைகளுக்குப் பயந்து 16 நாட்கள் தொடர்ந்து மூடி வைக்கப்பட்டு இருந்த நகை கடை உரிமையாளர்கள் திங்கட்கிழமை தங்களது இயல்பான வர்த்தகத்தைத் துவங்கினர்.
இதன் எதிரொலியாக இந்திய நாணய சந்தையில் நேற்று தங்கத்தின் விலை கிராமிற்கு 18 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை குறைந்தாலும் மோடி அறிவிப்பின் மூலம் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டின் மூலம் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடும் சரிவு வர்த்தகமும் சரி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 24 கேரட் ஒரு கிாரம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 2,939 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் குறைந்து 2,808 ரூபாயாகவும் ரீடைல் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications