சென்னை: அமெரிக்கா டாலர் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதை அடுத்து கமாடிட்டி சந்தையில் புதன்கிழமை முதல் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதன் உச்சத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாக 368 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரம் கச்ச எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதால் வரும் வாரங்களில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னையில் இன்று (18/05/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 46 ரூபாய் உயர்ந்து 2767 ரூபாய்க்கும், சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்து 22,136 ரூபாய்க்கும் விற்கிறது.
24 காரட் தங்க விலை நிலவரம்
இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2903
ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,224 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கிராம் 10 கிராம் தங்கம் 29,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு மாலை 3:12 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 69 காசுகளாக உள்ளது.
முட்டை விலை நிலவரம்
சென்னையில் இன்று முட்டை விலை 4.10 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.70 ரூபாயாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.07 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.21 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications