ஏற்றம் கண்டு குளிர்ந்த இந்திய பங்குச் சந்தை..! மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்

மும்பை: நிஃப்டி காலை 11,231 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி எப்படியோ ஏற்றம் கண்டு 11,301 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதே போல் சென்செக்ஸ் காலை 37,249 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி நிலையான ஏற்றம் கண்டு 37,535 க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

நிஃப்டி 50யில் இருக்கும் 50 பங்குகளில் 30 பங்குகள் விலை அதிகரித்தும், 19 பங்குகள் விலை இறக்கத்திலும், ஒரு பங்கு விலை மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாயின.

சென்செக்ஸில் இருக்கும் 30 பங்குகளில் 20 பங்குகள் விலை அதிகரித்தும் 10 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இன்று பி.எஸ்.இ-ல் வர்த்தகமான 2,862 பங்குகளில் 1,653 பங்குகள் ஏற்றத்திலும், 1,067 பங்குகள் இறக்கத்திலும், 142 பங்குகள் விலை மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாயின.

அதிகரித்த பங்குகள்

அதிகரித்த பங்குகள்

ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், இண்டச் இந்த் பேங்க், பார்தி ஏர்டெல், லார்சன் அண்ட் ட்யூப்ரோ, அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாயின.

இறக்கம் கண்ட பங்குகள்

இறக்கம் கண்ட பங்குகள்

ஈஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், ஓ.என்.ஜி.சி, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவ்ன பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் இந்தோனேசிய சந்தை தவிர மற்ற பங்குச் சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. நேற்று அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றாத்திலேயே நிறைவடைந்தது. இன்னும் இன்றைக்கான வர்த்தகம் தொடங்கவில்லை.

அமெரிக்க டாலர் Vs இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர் Vs இந்திய ரூபாய்

நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.89 ரூபாயாக இருந்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே மீண்டும் 0.24 சதவிகிதம் ஏற்றம் கண்டு 69.71 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது டாலர். இப்போது மேலும் 11 பைசா குறைந்து 69.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றம் கண்டு குளிர்ந்த இந்திய பங்குச் சந்தை..! மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+