5 ஆண்டுகளில் 10,000% லாபம் கொடுத்த பென்னி பங்கு. அப்பர் சர்க்கியூட் அடித்த மிக் எலக்ட்ரானிக்ஸ்..

மிக் (MIC) எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்இடி வீடியோ டிஸ்ப்ளேஸ், நவீன மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் வடிவமைப்பு,மேம்பாடு மற்றும் உற்பத்தியில் சர்வதே அளவில் முன்னணி நிறுவனமாக மிக் எலக்ட்ரானிக்ஸ் வலம் வருகிறது. ட்ரூ கலர் பிஐஎஸ் டிஸ்ப்ளேஸ் மற்றும் ரயில்வே கோச் லைட்டிங் தயாரிப்புகளுக்கு ஆர்டிஎஸ்ஓ அங்கீகாரத்தை பெற்ற முதல் மற்றும் ஒரே நிறுவனம் மிக் எலக்ட்ரானிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பென்னி பங்கான மிக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

மிக் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2.17 கோடியும், நிகர வருவாயாக ரூ.11.75 கோடியும் ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (2024 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.33.66 கோடியும், நிகர லாபமாக ரூ.6.25 கோடியும் ஈட்டியுள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.22.91 கோடியும், நிகர லாபமாக ரூ.26 லட்சமும் ஈட்டியுள்ளது.

5 ஆண்டுகளில் 10,000% லாபம் கொடுத்த பென்னி பங்கு.  அப்பர் சர்க்கியூட் அடித்த மிக் எலக்ட்ரானிக்ஸ்..

இந்நிறுவனம் புதிய ஆர்டகளை பெற்று வருவதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.55.46ஐ எட்டியது. மிக் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையிடமிருந்து, எல்எச்பி மற்றும் என்ஏசி பெட்டிகளுக்கு அவசர விளக்கு சிஸ்டம் வழங்குவதற்கும், நிறுவுவதற்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்களை பெற்று இந்நிறுவனத்துக்கு பெரிய வலுவாக அமைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,336 கோடியாக இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் மிக் எலக்ட்ரானிக்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 10,000 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 325 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ55.46ல் முடிவுற்றது. 2024 செப்டம்பர் 19ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.114.74ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு பங்கு விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. 2024 மார்ச் 14ம் தேதியன்று இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.36.75க்கு சென்றது.

Story written by: Subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+