அமெரிக்கப் பெடரல் வங்கி டிசம்பர் 15ஆம் தேதி நடத்த உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு அனைத்தும் பிரகாசகமாக இருக்கும் காரணத்தால் சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் அமெரிக்கக் கடன் சந்தையில் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 0.1 சதவீதம் அளவிற்குக் குறைந்து 10 மாத சரிவை அடைந்த நிலையில் இந்திய சந்தையில் முற்றிலும் மாறான நிலை ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் 60 புள்ளிகள் உயர்வில் இருந்த மும்பை பங்குச்சந்தை 100 புள்ளிகள் வரை மளமளவெனச் சரிந்தது. இதனால் இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை உயர்வில் மாற்றுப்பட்ட நிலை நிலவி வருகிறது.
சென்னையில் இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 51 ரூபாய் உயர்ந்து 2,920 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து 2,745 ரூபாய்க்குச் சில்லறை வர்த்தகச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications