வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கியமான 10 காரணிகள்.. கவனமா பாருங்க...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வாரத்தில் இந்திய சந்தையானது பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், இது வரும் வாரத்திலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

 

சென்செக்ஸ் மட்டும் இந்த காலகட்டத்தில் 1775 புள்ளிகள் குறைந்து, 57,012 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 526 புள்ளிகள் குறைந்து, 16,985 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதற்கிடையில் வரும் வாரத்தில் சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

ஓமிக்ரோன் அச்சம்

ஓமிக்ரோன் அச்சம்

தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் ஒமிக்ரான் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரையில் 126 வழக்குகள் பதிவாகியுள்ளன.ஆய்வாளர்கள் தொடர்ந்து ஓமிக்ரான் வழக்குகள் அதிகரிக்கலாம் என்றும் இது பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். இது மேலும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை போல, இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கின்றன.

சர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, இத்தாலி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச அளவிலான பொருளாதாரத் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையானது கடந்த சில வாரங்களாகவே, 9 ஆயிரம் பேருக்கு கீழாக குறைந்துள்ளது. இதிலிருந்து மீண்டு வரும் நபர்களின் எண்ணிக்கை 98% அதிகரித்துள்ளது. மேலும் தற்போது வரையிலும் கொரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு ஊசிகளும் மிக வேகமாக போடப்பட்டு வருகின்றது. இது வரையில் மொத்தம் கிட்டத்தட்ட 40% பேருக்கு அவர்கள் போடப்பட்டுள்ளது. இது அதிக அளவிலான ஓமிக்ரான் தாக்கத்தினை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்
 

அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து அன்னிய நிறுவனங்களின் முதலீடு வெளியேறி வருகின்றது. இதுவும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் வாரத்திலும் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இது சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய சந்தையில் தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்து வரும் நிலையில், இது பெரிய அளவிலான சரிவை தடுத்து வருகிறது.

ரூபாய் வீழ்ச்சி

ரூபாய் வீழ்ச்சி

தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து மேலாகவே வருகின்றது. இது தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கும் மேலாக சரிவினை காண வழி வகுத்துள்ளது.

நிபுணர்கள் வரும் வாரங்களிலும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆனது, ஒரு ரேஞ்சில் இருக்கலாம் என்று கணித்துள்ளனர். எனினும் இது ஓமிக்ரான் தாக்கத்தை பொறுத்து இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

ஓமிக்ரான் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலையானது, முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரத்தில் 2% சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது பேரலுக்கு 70 டாலர் என்ற அளவில் உள்ளது. ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, இது எண்ணெய் விலை குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இன்றி இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.

பங்குச்சந்தையில் பட்டியல்

பங்குச்சந்தையில் பட்டியல்

ஸ்ரீராம் ப்ராபர்டீஸ், மேப்மை இந்தியா, மெட்ரோ பிராண்ட்ஸ், மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் மற்றும் டேட்டா பேட்டர்ன்ஸ் உள்ளிட்ட பங்குகள் வரும் வாரத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.

ஸ்ரீ ராம் நிறுவனம் டிசம்பர் 20 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படுகிறது.

  • மேப்மை இந்தியா - டிசம்பர் 21
  • மெட்ரோ பிராண்ட்ஸ் - டிசம்பர் 22 அன்று பட்டியலிடப்படுகின்றது
  • மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் - டிசம்பர் 23
  • டேட்டா பேட்டர்ன்ஸ் - டிசம்பர் 24
ஐபிஓ

ஐபிஓ

சிஎம்ஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் நிறுவனம் வரும் வாரத்தில் தனது பங்கினை பப்கு சந்தையில் வெளியிடவுள்ளது.

இது டிசம்பர் 21 - 23 வெளியீட்டு தேதியாகும்.

விலை நிர்ணம் - பங்குக்கு ரூ.205 - 216

ஐபிஓ அளவு - ரூ.1,100

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

வார கேண்டில், தினசரி கேண்டில் என இரு பேட்டர்ன்களிலும் நிஃப்டி சந்தையில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டியின் 17,000 புள்ளிகளையும், அடுத்த முக்கிய லெவல் 16,900 என்ற லெவலையும், அடுத்ததாக 16,782 என்ற லெவலையும் உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப்பரேட் ஆக்சன் & சர்வதேச காரணிகள்

கார்ப்பரேட் ஆக்சன் & சர்வதேச காரணிகள்

பல நிறுவனங்களின் பங்குகள் டிவிடெண்டினை அறிவிக்க உள்ளன. சில நிறுவனங்கள் பங்கினை ஸ்பிளிட் செய்யவுள்ளன.

அமெரிக்கா நுகர்வோர் நம்பிக்கை, பர்சனல் லோன், கன்சியூமர் டியூரபிள் ஆர்டர், வேலையின்மை நலன், வீடு விற்பனை

ஐரோப்பாவின் நுகர்வோர் நம்பிக்கை,

ஜப்பான் - மானிட்டரி கூட்டம், பணவீக்கம், வீடு விற்பனை, கட்டிட ஆர்டர்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Factors That Will Determine The Market In The Next Week

Top 10 Factors That Will Determine The Market In The Next Week/வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கியமான 10 காரணிகள்.. கவனமா பாருங்க...!
Story first published: Sunday, December 19, 2021, 20:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X