முத்தான 10 மிட் கேப் பங்குகள்.. 53 சதவீதம் வரை லாபம் கன்ஃபார்ம்.. வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!

தொடர்ந்து 6 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளன. பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிட் கேப் பங்குகள் நல்ல லாபம் தரும் என்று தரகு நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் ட்ரெண்ட்லைன் தரவுகளின்படி, க்ராம்ப்டன் கிரீவ்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், ஆயில் இந்தியா, டெல்லிவரி உள்பட 10 பிஎஸ்இ மிட்கேப் பங்குகள் 53 சதவீதம் வரை வருமானத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரபிந்தோ பார்மா
18 ஆய்வாளர்கள் அரபிந்தோ பார்மாவுக்கு சராசரியாக 5க்கு 4.8 மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இப்பங்கின் சரசாரி இலக்கு விலை ரூ.1,516ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் தற்போதைய விலையான ரூ.1,202லிருந்து 26 சதவீத உயர்வை குறிக்கிறது.

முத்தான 10 மிட் கேப் பங்குகள்.. 53 சதவீதம் வரை லாபம் கன்ஃபார்ம்.. வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!

ஏசிசி
ஏசிசி நிறுவன பங்குக்கு 16 ஆய்வாளர்கள் சராசரியாக 4.6 ரேட்டிங் வழங்கி உள்ளனர்.. இப்பங்கின் சராசரி இலக்கு விலை ரூ.2,642ஆக கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்பங்கின் விலை தற்போதைய விலையிலிருந்து 37 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.1,926ல் முடிவுற்றது.

க்ராம்ப்டன் கிரீவ்ஸ்
இப்பங்குக்கு 13 ஆய்வாளர்கள் 5 என்ற சராசரி மதப்பீட்டை வழங்கியுள்ளனர். இப்பங்கின் இலக்கு விலை ரூ.498ஆக கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய விலையிலிருந்து 42 சதவீத உயர்வை குறிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.351ல் முடிவுற்றது.

டிக்சன் டெக்னாலஜிஸ்
டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு 13 ஆய்வாளர்களிடமிருந்து சராசரியாக 4.6 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.20,077ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.16,654ல் முடிவுற்றது. ஆக, வரும் நாட்களில் இப்பங்கின் விலை 21 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இமாமி
இமாமி நிறுவன பங்கு 11 ஆய்வாளர்களால் கவரேஜ் செய்யப்பட்டு, சராசரியாக 5 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.831ஆக கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய சந்தை விலையான ரூ.636லிருந்து 31 சதவீத உயர்வை குறிக்கிறது.

கம்மின்ஸ்
இப்பங்கு 10 ஆய்வாளர்களால் கவரேஜ் செய்யப்பட்டு, 4.7 சராசரி மதிப்பீட்டை கொண்டுள்ளது. இப்பங்கின் விலை தற்போது ரூ.3,036 என்ற அளவில் உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.3,829ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக வரும் நாட்களில் இப்பங்கின் விலை 26 சதவீதம் அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

ஆயில் இந்தியா
ஆயில் இந்தியா நிறுவனம் 10 ஆய்வாளர்களால் சராசரியாக 5 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இப்பங்கின் சராசரி இலக்கு விலை ரூ.647ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.424ல் முடிவுற்றது. வரும் நாட்களில் இப்பங்கின் விலை 53 சதவீதம் ஏற்றம் காண வாய்ப்புள்ளது.

டெல்லிவரி
டெல்லிவரி பங்குக்கு 10 ஆய்வாளர்கள் 4.5 மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இப்பங்கின் சராசரி இலக்கு விலை ரூ.426ஆகும். இப்பங்கின் தற்போதைய விலை ரூ.321ஆக உள்ளது. இப்பங்கின் விலை வரும் நாட்களில் 33 சதவீதம் உயரும் என்பதை குறிக்கிறது.

ஸ்டார் ஹெல்த்
ஸ்டார் ஹெல்த் 9 ஆய்வாளர்களிடமிருந்து 4.6 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இப்பங்கின் சராசரி இலக்கு விலை ரூ.603ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதைய விலையான ரூ.451லிருந்து 34 சதவீத உயர்வை குறிக்கிறது.

இப்கா லேபரட்டரீஸ்
இப்கா லேபரட்டரீஸ் பங்குக்கு 8 ஆய்வாளர்கள் சராசரியாக 4.7 மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த பங்கின் இலக்கு விலை ரூ.1,815ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதைய விலையான ரூ.1,393லிருந்து 30 சதவீத உயர்வை காட்டுகிறது.

ஐந்தே நாளில் ரூ.26.5 லட்சம் கோடி லாபம்.. இனி பங்குகளை இப்படி வாங்குங்க.. நிபுணர்கள் அட்வைஸ்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+