முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தந்த டாப் 10 Multibagger பங்குகள்..!

மும்பை பங்குச்சந்தை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 50% வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளன.

அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு லாபங்களை குவித்த டாப் 10 மல்டிபேக்கர் பங்குகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கலாம். ACE Equity தளத்தில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தந்த டாப் 10  Multibagger பங்குகள்..!

லாய்ட்ஸ் மெடல்ஸ் & எனர்ஜி (Lloyds Metals & Energy): இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் மும்பை பங்குச்சந்தையின் 500 குறியீட்டில் பெரும் லாபத்தை அள்ளிய பங்காக இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் வெறும் 14 ரூபாய் என இருந்த இந்த பங்கின் மதிப்பு மூன்று ஆண்டுகளில் 4,775% உயர்ந்து 716.65 ரூபாய் என வர்த்தகமாகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பங்கின் மதிப்பு 122% உயர்ந்துள்ளது.

ஜூபிடர் வேகன்ஸ் (Jupiter Wagons): ரயில்வே பெட்டிகளை தயாரிக்கும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மூன்று ஆண்டுகளில் 16 ரூபாயில் இருந்து 407.85 ரூபாய் என உயர்ந்துள்ளது. அதாவது 2,342% உயர்வு கண்டுள்ளது. கடந்த ஓராண்டில் 286% லாபம் தந்துள்ளது.

அபர் இண்டர்ஸ்ட்ரீஸ் (Apar Industries) : இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 2021 ஏப்ரல் மாதம் 496 ரூபாயாக இருந்தது. தற்போது 1480% உயர்ந்து, 7,844.9 என வர்த்தகமாகிறது. கடந்த 12 மாதங்களில் இதன் மதிப்பு 179% அதிகரித்துள்ளது.

பிஎல்எஸ் இண்டர்நேஷ்னல் சர்வீசஸ் (BLS International Services): ஓராண்டில் 95% மற்றும் மூன்று ஆண்டுகளில் 1444% இதன் மதிப்பு உயர்ந்துள்ளது. 22 ரூபாயில் இருந்து 350 ரூபாய் என உயர்வு கண்டுள்ளது.

ஜேபிஎம் ஆட்டோ (JBM Auto): மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 150.5 ரூபாயில் இருந்து 1905 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 1166% லாபம் தந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இதன் மதிப்பு 138% அதிகரித்துள்ளது.

மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders): பாதுகாப்பு துறையை இந்த பொதுத்துறை நிறுவனம் இது. மூன்று ஆண்டுகளில் 201 ரூபாயில் இருந்து 2,376 என உயர்ந்துள்ளது. சதவிகிதத்தில் பார்த்தால் 1078% ஆகும். ஓராண்டில் மட்டும் 215% லாபம் தந்துள்ளது.

ரயில் விகாஸ் நிகம் (Rail Vikas Nigam): பொதுத்துறை நிறுவனமான இது 3 ஆண்டுகளில் 956% லாபம் அளித்துள்ளது. 27 ரூபாயில் இருந்து ஒரு பங்கின் மதிப்பு 288.8 ரூபாய் என மாறியுள்ளது. ஓராண்டில் 168% ரிட்டர்ன்ஸ் தந்துள்ளது.

அதே போல சஸ்லான் எனர்ஜி (Suzlon Energy): மூன்று ஆண்டுகளில் 883%, ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (Hindustan Aeronautics) நிறுவனம் 747%, மற்றும் உஷா மார்டின் (Usha Martin) 731% என லாபம் தந்துள்ளன.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+