மும்பை: 2024ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு ஏற்றம் இறக்கம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. அக்டோபர் மாதம் வரை ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் நவம்பர் மற்றும் டிசம்பரில் சற்றே சரிவடைந்துள்ளன. அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபம் ஈட்டி தந்த டாப் 10 பங்குகளின் பட்டியலை பார்க்கலாம்..
GE Vernova T&D India Ltd – கனரக மின்னனு சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 349% உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் 528 ரூபாய் என இருந்த ஒரு பங்கின் மதிப்பு , தற்போது 2150 ரூபாய் உயர்ந்துள்ளது.

Motilal Oswal Financial Services Ltd: பங்குச்சந்தை தரகு நிறுவனமாகவும், மியூச்சுவல் ஃபண்டு மேலாண்மை நிறுவனமாகவும் இது செயல்படுகிறது. நடப்பாண்டில் ஜனவரி 1ஆம் தேதி இதன் ஒரு பங்கு மதிப்பு 315 ரூபாய், அதுவே தற்போது 920 ரூபாய் என உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இதன் மதிப்பு 226.59% உயர்ந்துள்ளது.
Jyoti CNC Automation Ltd: தொழில்துறைக்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வழங்கும் நிறுவனம் இது. ஐபிஓ வெளியீடு செய்து இந்நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ஜனவரி மாதம் நுழைந்தது. அப்போது ஒரு பங்கின் மதிப்பு 431 ரூபாய், தற்போது 1,304.20 ரூபாய் ஆகும். ஓராண்டில் இது சுமார் 200.37% லாபம் தந்துள்ளது.
Oracle Financial Services Software Ltd: வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தேவையான ஐடி சேவைகளை வழங்கி வருகிறது இந்நிறுவனம். ஜனவரி 1ஆம் தேதி இதன் ஒரு பங்கு மதிப்பு 4400 ரூபாய், தற்போது 190% உயர்ந்து 12,245 ரூபாய் என வர்த்தகமாகிறது.
Housing and Urban Development Corporation Ltd: உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி வழங்கும் நிறுவனம் தான் இது. ஜனவரி 1ஆம் தேதி இதன் பங்கு மதிப்பு 129 ரூபாய் என இருந்தது. தற்போது 179% உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 250 ரூபாய் என வர்த்தகமாகிறது.
Godfrey Phillips India Ltd: எஃப்எம்சிஜி பிரிவில் இயங்கி வரும் இந்நிறுவனம் 2024ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு பங்கு மதிப்பு 2153 ரூபாய் என இருந்து தற்போது 5,000 ரூபாயை கடந்து 178% லாபம் தந்துள்ளது.
Dixon Technologies (India) Ltd: வீட்டு உபயோக பொருட்கள், மின்னனு சாதன தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இது. இந்த ஆண்டில் 174% லாபம் தந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஜனவரியில் இதன் ஒரு பங்கு மதிப்பு 6316 ரூபாய் என இருந்து தற்போது 17,514 ரூபாய் என்றாகியுள்ளது.
PB Fintech Ltd: இந்நிறுவனம் தான் பாலிசி பஜார், பைசா பஜார் உள்ளிட்டவற்றை இயக்குகிறது. ஜனவரி மாதம் 800 ரூபாய் என இருந்த இதன் ஒரு பங்கு மதிப்பு தற்போது 2,172.65 ரூபாய் என உயர்ந்து 168.54% லாபம் தந்துள்ளது.
Kaynes Technology India Ltd: மின்னனு பாகங்கள் தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வரும் நிறுவனம் இது. ஜனவரி மாதம் 2500 ரூபாய் என இருந்த இதன் ஒரு பங்கு விலை தற்போது 6,355.10 என உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 167.28% லாபம் ஈட்டி தந்துள்ளது.
Netweb Technologies India Ltd: ஐடி பிரிவில் இயங்கி வரும் நிறுவனம் இது. ஜனவரி மாதம் ஒரு பங்கின் மதிப்பு 1100 ரூபாய் என இருந்து தற்போது 2,898.05 ரூபாய் என அதிகரித்து 164.78% லாபம் தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications