மும்பை: இந்திய பங்கு சந்தையானது கடந்த நிதியாண்டின் கடைசி வாரத்திலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் முடிவடைந்தது. குறிப்பாக கடந்த வார ஏற்றத்தில் நாட்டின் முன்னணி வர்த்தக குழுமத்தின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டாப் கெயினராகவும் இருந்தது.
இதற்கிடையில் சிறந்த 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 2,34,097.42 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் ராம நவமி காரணமாக இந்திய பங்கு சந்தைக்கு இடையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் கூட, சென்செக்ஸ் 1464.42 புள்ளிகள் அல்லது 2.54% அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் & டிசிஎஸ்
டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டாப் கெயினராக உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பானது கடந்த வாரத்தில் 86,317.26 கோடி ரூபாய் அதிகரித்து, 15,77,092.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பானது, 30,864.1 கோடி ரூபாய் அதிகரித்து, 11,73,018.,69 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச் டி எஃப் சி வங்கி & இன்ஃபோசிஸ்
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச் டி எஃப் சி வங்கியின் சந்தை மதிப்பானது, 26,782.76 கோடி ரூபாய் அதிகரித்து, 8,98,199.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 19,601.95 கோடி ரூபாய் அதிகரித்து, 5,92,289.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச் யு எல் & ஐசிஐசிஐ வங்கி
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 18,385.55 கோடி ரூபாய் அதிகரித்து, 6,01,201.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது, 17,644.35 கோடி ரூபாய் அதிகரித்து, 6,12,532.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச் டி எஃப் சி & எஸ்பிஐ
ஹெச் டி எஃப் சி-யின் சந்தை மதிப்பானது, 12,155.78 கோடி ரூபாய் அதிகரித்து, 4,82,001.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே எஸ்பிஐ சந்தை மதிப்பானது, 16,153.55 கோடி ரூபாய் அதிகரித்து, 4,67,381.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐடிசி-யின் சந்தை மதிப்பானது, 6192.12 கோடி ரூபாய் அதிகரித்து, 4,17,577.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிலவரம்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7,387.05 கோடி ரூபாய் குறைந்து, 4,17,577.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் டாப் கெயினர்களாக இருந்தாலும், ஒற்றை பங்காக பார்தி ஏர்டெல் பங்கு மட்டும் டாப் லூசர்களாகவும் உள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பார்தி ஏர்டெல் பங்குகள் உள்ளன.


Click it and Unblock the Notifications