மூன்றே மாதத்தில் ரூ.1 லட்சம் டூ ரூ.1.64 லட்சம்.. அள்ளிக் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக பங்குச் சந்தையில் பாதுகாப்பு துறையை சோந்த பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். இதனையடுத்து இத்துறையை சேர்ந்த பங்குகளின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. அதேவேளையில், பாதுகாப்பு துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் பெருமளவில் லாபம் ஈட்டின.

வெறும் மூன்றே மாதத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் 64 சதவீதம் வரை வருமானத்தை அளித்துள்ளன. உதாரணமாக நீங்கள் சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்யும் ரூ.1 லட்சம், அடுத்த 90 நாட்களில் ரூ.1.64 லட்சமாக உயர்ந்திருக்கும். 90 நாட்களில் 38 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை லாபம் கொடுத்த 4 பாதுகாப்பு துறையை சேர்ந்த 4 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை பார்ப்போம்.

மூன்றே மாதத்தில் ரூ.1 லட்சம் டூ ரூ.1.64 லட்சம்.. அள்ளிக் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்

குரோவ் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இடிஎஃப் எஃப்ஓஎஃப் டைரக்ட் குரோத்
இந்த துறைசார் ஃபண்டு 3 மாத காலத்தில் 63.16 சதவீத ஆண்டு எஸ்ஐபி வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.39 கோடியாக உள்ளது. அதேவேளையில், 2025 மே 16ம் தேதி நிலவரப்படி, அதன் யூனிட் விலை ரூ.12.38 ஆகும். கடந்த டிசம்பரில் இந்த ஃபண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 23.15 சதவீத ஆண்டு வருமானத்தை வழங்கியுள்ளது.

இந்த ஃபண்டு அதன் முதலீடுகளில் 38.39 சதவீதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 39.21 சதவீதத்தை மிட் கேப் பங்குகளிலும், 22.56 சதவீத முதலீட்டை ஸ்மால் கேப் பங்குகளிலும் கொண்டுள்ளது. 3 மாத காலத்தில் இந்த ஃபண்டில் ரூ.1 லட்சத்தை ஒரு முறை முதலீடாக மேற்கொண்டு இருந்தால் அது இப்போது ரூ.1.63 லட்சமாக உயர்ந்திருக்கும்.

மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் ஃபண்டு டைரக்ட் குரோத்
இந்த துறைசார் ஃபண்டு வெறும் 3 மாதங்களில் 62.15 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.2,875 கோடியாகும். 2025 மே 16ம் தேதி நிலவரப்படி இதன் நிகர சொத்து மதிப்பு (ஒரு யூனிட் விலை) ரூ.10.89ஆக உள்ளது.

இந்த ஃபண்டில குறைந்தபட்ச எஸ்பிஐ முதலீடு ரூ.500 ஆகவும், குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.1,000ஆகவும் உள்ளது.இந்த ஃபண்டு அதன் முதலீடுகளில் 38.32 சதவீதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 39.14 சதவீதத்தை மிட் கேப் பங்குகளிலும், 22.51 சதவீத முதலீட்டை ஸ்மால் கேப் பங்குகளிலும் கொண்டுள்ளது. கேபிட்டல் குட்ஸ், ரசாயனங்கள்,தகவல் தொடர்பு மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகளில் முக்கியமாக முதலீடு செய்துள்ளது.

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ள பங்குகளில் எச்ஏஎல், பிஇஎல், சோலார் இண்டஸ்ட்ரீஸ், மசகான் டக், பாரத் டைனமிக்ஸ் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு ஆகியவை முக்கியமானவை. 3 மாதங்களில் ரூ.1 லட்சம் ஒரு முறை முதலீடு செய்து இருந்தால் அது இப்போது ரூ.1.62 லட்சமாக பெருகியிருக்கும்

எச்டிஎஃப்சி டிபன்ஸ் ஃபண்டு டைரக்ட் குரோத்
இந்த ஸ்மால் கேப் ஃபண்டு 3 மாத காலத்தில் 43.33 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இந்த ஃபண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.5,487 கோடியாக உள்ளது. 2025 மே 16ம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.24.2ஆக உள்ளது. நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் டிஆர்ஐக்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட இந்த ஃபண்டு, 2023 மே-ல் தொடங்கப்பட்டது முதல் 56.74 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.100ஆக உள்ளது. இந்த ஃபண்டின் செலவு விகிதம் 0.74 சதவீதம்.

இந்த ஃபண்டு அதன் முதலீடுகளில் 46.13 சதவீதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 14.52 சதவீதத்தை மிட் கேப் பங்குகளிலும், 34.6 சதவீத முதலீட்டை ஸ்மால் கேப் பங்குகளிலும் கொண்டுள்ளது. கேபிட்டல் குட்ஸ், ரசாயனங்கள், தகவல் தொடர்பு மற்றும் கட்டுமான துறைகளில் அதன் முக்கிய முதலீடுகளை கொண்டுள்ளது.

இந்த ஃபண்டின் போர்ட்போலியாவில் எச்ஏஎல், பிஇஎல், சோலார் இண்டஸ்ட்ரீஸ், பிஇஎம்எல் மற்றும் அஸ்ட்ரா மைக்ரோவேவ் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் இடம் பிடித்துள்ளன. 3 மாதங்களில் ரூ.1 லட்சம் ஒரு முறை முதலீடு செய்து இருந்தால் அது இப்போது ரூ.1.43 லட்சமாக வளர்ந்திருக்கும்.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இன்டெக்ஸ் ஃபண்டு டைரக்ட் க்ரோத்
இந்த பாதுகாப்பு ஃபண்டு 3 மாத காலகட்டத்தில் 38.65 சதவீத ஆண்டு எஸ்ஐபி வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.461 கோடி. 2025 மே 16ம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டின் ஒரு யூனிட் விலை ரூ.11.9ஆக உள்ளது. 2024 ஆகஸ்டில் இந்த ஃபண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 19.8 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது.

இந்த ஃபண்டில குறைந்தபட்ச எஸ்பிஐ முதலீடு ரூ.500 ஆகவும், குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ.1,000ஆகவும் உள்ளது. இந்த ஃபண்டின் செலவு விகிதம் 0.31 சதவீதமாக உள்ளது.இந்த ஃபண்டு அதன் முதலீடுகளில் 38.33 சதவீதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 39.15 சதவீதத்தை மிட் கேப் பங்குகளிலும், 22.52 சதவீத முதலீட்டை ஸ்மால் கேப் பங்குகளிலும் கொண்டுள்ளது. இந்த ஃபண்டு கேபிட்டல் குட்ஸ், ரசாயனங்கள், தகவல் தொடர்பு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளை அதன் முக்கிய முதலீடாக கொண்டுள்ளது.

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ள பங்குகளில் எச்ஏஎல், பிஇஎல், சோலார் இண்டஸ்ட்ரீஸ், மசகான் டக், பாரத் டைனமிக்ஸ் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு ஆகியவை முக்கியமானவை. 3 மாதங்களில் ரூ.1 லட்சத்தை ஒரு முறை முதலீடாக செய்து இருந்தால் அது இப்போது ரூ.1.38 லட்சமாக அதிகரித்து இருக்கும்.

வங்கதேசத்துக்கு வைச்ச செக்.. மாட்டிக் கொண்ட சீனா.. இந்தியாவுக்கு ரூ.1,000 கோடி வணிகம் லாபம்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+