நம் நாட்டில் மீண்டும் தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெரும்பாலான புதிய தொற்று பாதிப்புகள் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றம் ஒடிசாவிலிருந்து பதிவாகியுள்ளன. 2025 மே 29ம் தேதியன்று காலை 9 மணி நிலவரப்படி, மே 19ம் தேதி முதல் நம் நாட்டில் 1,010 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மகாராஷ்டிராவில் 3 பேரும், கேரளாவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தகவல்.
சானிடைசர்
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் அணிவது, சானிடைசர் கொண்டு கைகளை கழுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் எடுப்பது நல்லது. கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்க தொடங்கினால் மாஸ்க், சானிடைசர், மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா எதிர்ப்பு மருந்துகளுக்கான தேவை அதிகரிக்கும். இது எப்எம்சிஜி , மருந்து மற்றும் மருத்துவமனை நிறுவனங்களுக்கு பெரிய வர்த்தக வாய்ப்பாக உருவாகும்.

இதனால் தற்போது மருந்து மற்றும் அது சார்ந்த நிறுவன பங்குகளுக்கு முதலீ்ட்டாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம். சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட், சன்பார்மா, மேன்கைன்ட் பார்மா, கிளென்மார்க் பார்மா, அரபிந்தோ பார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்,.ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் போன்ற மருந்து மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த பங்குகள் மீது முதலீட்டாளர்கள் ஒரு கண் வைப்பது நல்லது.
டயக்னாஸ்டிக் சென்டர்
கோவிட் தொடர்ந்து வேகமாக பரவினால், நோயறிதல் மையங்களின் தேவை அதிகரிக்கும். இந்த பிரிவில் விஜயா டயக்னாஸ்டிக் சென்டர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. விஜயா டயக்னாஸ்டிக் சென்டர், சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட் நிறுவனம் தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திராவில் வலுவான இருப்பை கொண்டுள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக வேகமாக வளர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் விஜயா டயக்னாஸ்டிக் சென்டர் பங்கு விலை ரூ.951.70ஆக இருந்தது.
கோவிட் பாதிப்புகள் அதிகரித்தால் மருத்துவமனைகளுக்கான தேவை அதிகரிக்கும். அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் போன்ற மருத்துவமனை பலன் பெறும். சங்கிலித்தொடர் மருத்துவமனைகளை நடத்தி வரும் நிறுவனம் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன பங்கின் விலை ரூ.715.55ஆக உள்ளது. அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர் பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை தற்போது ரூ.6,935.90ஆக உள்ளது.
சன் பார்மா
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததக்தின் முடிவில் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா பங்கின் விலை ரூ.1,699.85ஆக இருந்தது. சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட் பங்கின் விலை ரூ.926.15ஆக உள்ளது.
எல்ஐசி புதுசா முதலீடு செய்த 3 நிறுவனங்கள்.. இந்த பங்குகள் உங்ககிட்ட இருக்கா..??
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications