இன்று சென்செக்ஸ், நிஃப்டி எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்று சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சரிவு தொடரலாமோ என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்து, 59,197 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 17,656 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையலாம் எனும் விதமாக பியரிஷ் கேண்டில் உருவாகியுள்ளது. ஆர் எஸ் ஐ-யும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

 முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

பைவேட் சார்ட்டின் படி, நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,5764 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 17,492 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 17,751 புள்ளியாகவும், அதனை தொடர்ந்து 17,846 புள்ளியாகவும் உள்ளது.

 பேங்க் நிஃப்டி

பேங்க் நிஃப்டி

பேங்க் நிஃப்டி கடந்த அமர்வில் 139 புள்ளிகள் குறைந்து, 39,666 புள்ளிகளாகவும் இருந்தது. தினசரி கேண்டில் பேட்டர்னிலும் பியரிஷ் கேண்டில் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இன்று சற்று சரிவினை காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பைவேட் கணக்கீட்டின் படி முக்கிய சப்போர்ட் லெவல் 39,463 புள்ளியாகவும், அதனை தொடர்ந்து 39,259 புள்ளியாகவும் உள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 39,972 புள்ளிகளாகவும், இதனை தொடர்ந்து 40,278 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 கால் &  புட் ஆப்சன் டேட்டா

கால் & புட் ஆப்சன் டேட்டா

கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக அதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

 ஹை டெலிவரி பர்சேன்டேஜ்

ஹை டெலிவரி பர்சேன்டேஜ்

ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், பொதுவாக முதலீட்டாளார்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்களாக உள்ளன. இதில் டாப் பங்குகளில் சின்ஜீன் இண்டர்நேஷனல், நவீன் ப்ளூரின் இண்டர்நேஷனல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், வோல்டாஸ், மாரிகோ, ஹெச் டி எஃப் சி வங்கி, PFC, அப்போட் இந்தியா, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட சில பங்குகள் இன்று கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.

 நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு

நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு

ஒரு பங்கின் விலை அதிகரிக்கும்போது, அதன் ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால், அது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
அந்த வகையில் கவனிக்க வேண்டிய டாப் 10 பங்குகளில் PFC, அப்பல்லோ டயர், ஏசிசி, டோரண்ட் பவர், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் (BALKRISIND), டாடா பவர், சோழாமண்டலம் பைனான்ஸ், RECLTD, ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் (SRTRANSFIN), டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பல பங்குகள் அடங்கும்.

 நீண்டகால சரிவு

நீண்டகால சரிவு

ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும்போது, பங்கு விலையும் குறைந்தால் இந்த பங்குகள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய பங்குகளில்

பைனான்ஸ் நிஃப்டி
ஃபெடரல் வங்கி
பாலிகேப்
சாம்பல் ஃபெர்டிலைசர் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (CHAMBLFERT)
டெல்டா கார்ப்
பேங்க் ஆப் பரோடா
போஸ் லிமிடெட் (BOSCHLTD)
ஐஆர்சிடிசி (IRCTC)
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் (PIDILITIND)
ஹெச்டிஎஃப்சி வங்கி

 

 ஷார்ட் பில்டப்

ஷார்ட் பில்டப்

ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் அதிகரித்து, பங்கு விலை குறைந்தால், இந்த பங்கு விலையானது குறுகிய காலத்தில் ஏற்றம் காணலாம்.


சின்ஜீன் இண்டர்நேஷனல்
ஹெச் டி எஃப் சி AMC
OFSS
BEL
டோரண்ட் பார்மா (TORNTPHARM)
பிரிட்டானியா
பிஐ இண்டஸ்ட்ரீஸ் (PIIND)
அல்ட்ராடெக் சிமெண்ட்
கோடக் மகேந்திரா வங்கி
டாடா கன்சியூமர்

 

ஷார்ட் கவரிங்

ஷார்ட் கவரிங்

இதே ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் குறையும்போது, பங்கின் விலை அதிகரித்தால் அது ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம்.

க்ராம்ப்டன் கிரேவ்ஸ்
கெயில்
ஹீரோமோட்டோ கார்ப்
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்
இந்தியா மார்ட்
பாரத் ஃபோர்ஜ்
ஆஸ்ட்ரால்
ரிலையன்ஸ்
எஸ்பிஐ லைஃப்
ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும்.

 

 மொத்த ஒப்பந்தங்கள்

மொத்த ஒப்பந்தங்கள்

ட்ரீம்ஃபோல்க்ஸ் சர்வீசஸ், ஹட்சன் அக்ரோ, சின்ஜீன் இண்டர்நேஷனல், அர்விந்த் ஸ்மார்ட் ஸ்பேஷஸ், ஜெட் ஃப்ரைட் லாகிஸ்டிக்ஸ், நிடான் லேப்ஸ் & ஹெல்த் லிமிடெட்உள்ளிட்ட பல பங்குகள் இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக உள்ளன. மேற்கண்ட பங்குகள் திறந்த சந்தை உள்ளிட்ட சில பரிவர்த்தனைகள் மூலம் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

முதலீட்டாளர்கள் கூட்டம்

முதலீட்டாளர்கள் கூட்டம்

செப்டம்பர் 6 ஆன இன்று, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், கே இ ஐ இண்டஸ்ட்ரீஸ், ஓன்97 கம்யூங்கேஷன்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அஜந்தா பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.

 பங்கு செய்திகள்

பங்கு செய்திகள்

விப்ரோ, ஆஸ்ட்ரால், பாராஸ் டிபென்ஸ், இண்டர்குளோப் ஏவியேஷன், சலாசார் டெக்னோ, ஜுரி இண்டர்நேஷனல் உள்ளிட்ட பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் உள்ளன.

 அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

செப்டம்பர் 6 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 1144.53 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 632.97 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

 எஃப் & ஓ தடை

எஃப் & ஓ தடை

பொதுவாக ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படும். இந்த பங்குகள் மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும்.இன்றைய சந்தை அமர்வில் அப்படி இருக்கும் பங்குகள் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+