இன்று சந்தையின் போக்கு எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

இந்திய சந்தைகள் கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து இன்று எப்படியிருக்குமோ என்ற பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்செக்ஸ் 440 புள்ளிகள் அதிகரித்து, 59,246 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 126 புள்ளிகள் அதிகரித்து, 17,666 புள்ளிகளாகவும் இருந்தது.

தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாக சற்று மேலாக காணப்படும் நிலையில், நிஃப்டி தற்போது வரையில் 17,300 - 17800 என்ற லெவல்களுக்குள்ளே காணப்படுகின்றது. ஆக இந்த முக்கிய லெவலை உடைக்கும்பட்சத்தில் சந்தையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

பைவேட் சார்ட்டின் படி, நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,576 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 17,487 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 17,719 புள்ளியாகவும், அதனை தொடர்ந்து 17,773 புள்ளியாகவும் உள்ளது.

பேங்க் நிஃப்டி

பேங்க் நிஃப்டி

பேங்க் நிஃப்டி கடந்த அமர்வில் 385 புள்ளிகள் அதிகரித்து, 39,806 புள்ளிகளாகவும் இருந்தது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் புல்லிஷ் கேண்டில் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இன்று ஏற்றத்தினை காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பைவேட் கணக்கீட்டின் படி முக்கிய சப்போர்ட் லெவல் 39,502 புள்ளியாகவும், அதனை தொடர்ந்து 39,235 புள்ளியாகவும் உள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 39,978 புள்ளிகளாகவும், இதனை தொடர்ந்து 40,151 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கால் &  புட் ஆப்சன் டேட்டா

கால் & புட் ஆப்சன் டேட்டா

கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக அதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

 ஹை டெலிவரி பர்சேன்டேஜ்

ஹை டெலிவரி பர்சேன்டேஜ்

ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், பொதுவாக முதலீட்டாளார்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்களாக உள்ளன. இதில் பவர் கிரிட் கார்ப், ஹெச் டி எஃப் சி வங்கி, IPCA லேபாரட்டீஸ், பஜாஜ் ஆட்டோ, கன்டெய்னர் கார்ப்பரேஷன், கோத்ரேஜ், டிசிஎஸ், பிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட சில பங்குகள் இன்று கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.

நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு

நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு

ஒரு பங்கின் விலை அதிகரிக்கும்போது, அதன் ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால், அது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
அந்த வகையில் கவனிக்க வேண்டிய டாப் 10 பங்குகளில் எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ், பேங்க் நிஃப்டி, ஃபைனான்ஷியல் நிஃப்டி, டிக்சான் டெக்னாலஜி, பவர் கிரிட் கார்ப், RAIN, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க், அமரராஜா பேட்டரீஸ், இந்தியா ஹோட்டல்ஸ், ஏபிகேப்பிட்டல் (ABCAPITAL) உள்ளிட்ட பல பங்குகள் அடங்கும்.

நீண்டகால சரிவு

நீண்டகால சரிவு

ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும்போது, பங்கு விலையும் குறைந்தால் இந்த பங்குகள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய பங்குகளில்
இந்தியா மார்ட்
ஹனிவெல் ஆட்டோமேஷன்,
டெல்டா கார்ப்
டாபர் இந்தியா
ஈச்சர் மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்
பிரிட்டானியா
பிடிலைட் இண்டஸ்ட் ரீஸ்
மதர்சன்

ஷார்ட் பில்டப்

ஷார்ட் பில்டப்

ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் அதிகரித்து, பங்கு விலை குறைந்தால், இந்த பங்கு விலையானது குறுகிய காலத்தில் ஏற்றம் காணலாம்.

பஜாஜ் ஆட்டோ
சின்ஜீன் இண்டர்நேஷனல்
ஆஸ்ட்ரல்
சிட்டி யூனியன் வங்கி
பாரத் ஃபோர்ஜ்
அப்போட் இந்தியா லிமிடெட்
கன்டெய்னர் கார்ப்பரேஷன்
குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
டோரண்ட் பவர் லிமிடெட்
மெட்ரோபொலிஸ்

 

ஷார்ட் கவரிங்

ஷார்ட் கவரிங்

இதே ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் குறையும்போது, பங்கின் விலை அதிகரித்தால் அது ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம்.

இந்த பட்டியலில்
ஹிண்டால்கோ
எம் & எம் பைனான்ஸ்
இன்டெலக்ட் டிசைன் அரீனா லிமிடெட் (INTELLECT)
அல்கீம் லேபாரட்டீஸ் (ALKEM)
கெயில்
ரிலையன்ஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
அப்பல்லோ டயர்
டாடா கன்சியூமர்
அசோக் லேலாண்ட் உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும்.

 

மொத்த ஒப்பந்தங்கள்

மொத்த ஒப்பந்தங்கள்

அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், வீ மார்ட் ரீடெயில் உள்ளிட்ட பல பங்குகள் இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக உள்ளன. மேற்கண்ட பங்குகள் திறந்த சந்தை உளளிட்ட சில பரிவர்த்தனைகள் மூலம் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

முதலீட்டாளர்கள் கூட்டம்

முதலீட்டாளர்கள் கூட்டம்

செப்டம்பர் 6 ஆன இன்று,டிசிஎஸ், மெட்ரோ பிராண்ட்ஸ்,சின்ஜீன் இண்டர்நேஷனல், வோல்டாஸ், பஜாஜ் பைனான்ஸ், என் சி எல் இந்தியா, டாக்டர் லால் பாத் லேப், விஐபி இண்டஸ்ட்ரீஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் நிறுவனம், ஷப்பயர் ஃபுட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.

பங்கு செய்திகள்

பங்கு செய்திகள்

ட்ரீம்போல்க்ஸ் சர்வீசஸ், கமர்சியல் Syn Bags,டிசிடபள்யூ, நாரயண ஹிருதாலயா, டெல்லிவரி உள்ளிட்ட பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் உள்ளன.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

செப்டம்பர் 5 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 811.75 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 533.77 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

எஃப் & ஓ தடை

எஃப் & ஓ தடை

பொதுவாக ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்படும். இந்த பங்குகள் மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும்.இன்றைய சந்தை அமர்வில் அப்படி இருக்கும் பங்குகள் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+