மும்பை: இந்திய பங்குச்சந்தையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கொரோனா கால சரிவுக்கு பின்னர் பெருமளவில் மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைப் பெற்று தந்துள்ளன.
அந்த வகையில் ட்ரான்ஸ்பார்மர்ஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் இந்தியா லிமிடெட் - Transformers and Rectifiers (India) Ltd (TRIL) டிஆர்ஐஎல் என்ற மல்டிபேக்கர் பங்கு கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டை பெற்று தந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் தேசிய பங்கு சந்தையில் டிஆர்ஐஎல் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 6.30 ரூபாயாக இருந்தது. அதுவே 2024 ஏப்ரல் 30ஆம் தேதி தேசிய பங்கு சந்தையில் 626 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
நான்காண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் நிறுவனத்தின் பங்கு 415 ரூபாயிலிருந்து 626 ரூபாயாக உயர்வு கண்டுள்ளது. கிட்டத்தட்ட இது 50% வளர்ச்சியாகும்.
இந்த பங்கு 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 238 ரூபாயிலிருந்து 626 ரூபாய் என உயர்ந்துள்ளது. இது 160% உயர்வு ஆகும். கடந்த ஆறு மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 300%, ஓராண்டு காலத்தில் 850 % வளர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 2020 ஆம் ஆண்டு மே மாதம் வெறும் 6 ரூபாய் என்று அளவில் இருந்தது நான்கே ஆண்டுகளில் 600 என்ற அளவை எட்டியிருக்கிறது.
இந்த வளர்ச்சியின் அடிப்படையில் கடந்த மாதம் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது தற்போது 1.5 லட்சம் ரூபாயாக மாறி இருக்கும். அதே போல ஜனவரி மாதம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது 2.60 லட்சமாக மாறி இருக்கும். கடந்த 2020 ஆம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்த அனைவரும் தற்போது 1 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளனர்.
டிஆர்ஐஎல் நிறுவனத்தை பொறுத்தவரை சந்தை மூலதனம் என்பது 8,925 கோடி ரூபாயாக உள்ளது. புக் வேல்யூ 38.89 ஆகவும் ஃபேஸ் வேல்யு 1 என்ற அளவிலும் இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 1,405 கோடியாக உள்ளது, நிறுவனத்தின் லாபம் 2023இல் 42 கோடியாக இருந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications