48 மணி நேரம், அதற்குள் ஒரு முடிவு எடுங்கள், இல்லை என்றால் நரகம் உங்கள் மேல் மழையாய் பொழியும். இது ஏதோ ஹாலிவுட் பட வசனம் அல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ஈரானுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை. ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் அல்லது உடன்படிக்கைக்கு வர வேண்டும் என டிரம்ப் கொடுத்துள்ள இந்த காலக்கெடு, உலக நாடுகளை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் போருக்கான கவுண்ட்டவுன், மறுபக்கம் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை என திங்கள் கிழமை இந்தியப் பங்குச் சந்தை என்னவாகுமோ என்ற பீதி இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.

ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை பறந்து கொண்டிருக்க, பங்குச் சந்தைகள் என்ன செய்வது என செய்வதறியாது தாறுமாறாக வர்த்தகமாகி வருகின்றன. இந்த சூழலில் ஈரான் நரகமாக மாறும் என்ற டிரம்பின் மிரட்டலால் இனி என்னவாகுமோ என்ற அச்சம் மேலும் தொற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகள், ஈரான் ராணுவதற்கு தொடர்ந்து பதற்றத்தை கொடுத்து வரும் நிலையில், ஈரான், டிரம்பின் எச்சரிக்கைக்கு பணியுமா அல்லது இன்னும் போரானது விஸ்வரூபம் எடுக்குமா என்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. கடந்த 25ம் தேதி அன்று ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டிரம்ப் ஒரு பட்டியலை ஈரானுக்கு வெளியிட்டார்.
ஆனால் எதற்கும் அசராத ஈரான், இதுவரையில் அமைதி பேச்சு வார்த்தைக்கும் உடன்படவில்லை. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் என பல முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அடுத்த 10 நாட்களில் தாக்குதல் நடத்தப்படாது என்று டிரம்ப் கூறினார். ஆனால் அதெல்லாம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. இந்த சூழலில் இந்த 48 மணி நேர கெடுவையடுத்து இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ என்ற கேள்வியே எழுந்துள்ளது.
ஏப்ரல் 6 வரை விதிக்கப்பட்டுள்ள கெடு நெருங்கி வரும் சூழலில், ஈரான் ஒப்பந்தத்திற்கு வருமா அல்லது ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்குமா, ஒரு வேளை ஈரான் இதற்கு அசையா விட்டால் போர் இன்னும் மோசமான நிலைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது நாளை பங்குச் சந்தையில் என்ன செய்ய காத்திருக்கிறதோ, தங்கம் விலை என்னவாகுமோ? ஏற்கனவே சாமானியர்கள் பணவீக்கத்தால் தத்தளித்து வரும் நிலையில், பணவீக்கம் என்னவாகுமோ, பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமோ, மொத்தத்தில் இந்தியா போன்ற பெரிய இறக்குமதியாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற குழப்பமே முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இது மேலும் அந்நிய முதலீடுகள் தொடங்கி, நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் வெளியேற காரணமாக அமையலாம். ஆக சந்தைகள் மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கலாம். ஆக சிறு முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் வர்த்தகத்தை தொடங்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications
