பல்வேறு விளையாட்டு தயாரிப்பு, ஊக்குவிப்பு மற்றும் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் டோயம் ஸ்போர்ட்ஸ் லிமிடெட். இநநிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மைக்ரோ கேப் நிறுவனமாகும். இந்நிறுவனத்துக்கு டி20 ஆப்பிரிக்கன் கோப்பை லீக் மற்றும் இந்தியா-வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.
மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் முதல் கலப்பு தற்காப்புக் கலைகள் (MMA) ரியாலிட்டி ஷோவான குமிட் 1 வாரியர் ஹன்ட் நிகழ்ச்சியை வழங்கியது. தற்போது கிரிக்கெட் மற்றும் எம்எம்ஏ ஆகியவற்றை தாண்டி ஒரு பாதையை உருவாக்கி வருகிறது.

இந்நிறுவனம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. டோயம் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (டி.எஸ்.எல்.) நிறுவனம் 2022ல் தொடங்கப்பட்ட மீடியோரா உலக டென்னிஸ் லீக்கின் ஸ்பான்சராக இருந்தது. தற்போது அந்த லீக்கில் ஒரு அணியின் உரிமையாளராக மாறியுள்ளது.
டி.எஸ்.எல். நிறுவனத்தின் துணை நிறுவனமான பசிபிக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மீடியோரா உலக டென்னிஸ் லீக்கில் இடம் பெற்றுள்ள டி.எஸ்.எல். ஹாக்ஸ் அணியின் உரிமையை பெற்றுள்ளது. டி.எஸ்.எல். ஹாக்ஸ் அணியை பிரபலப்படுத்தும் நோக்கில், தனது பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகரும், பிட்னஸ் ஐகானுமான சுனில் ஷெட்டியை டி.எஸ்.எல். நியமனம் செய்தது.
மைக்ரோ கேப் நிறுவனம் சுனில் ஷெட்டியை பிராண்ட் தூதராக நியமனம் செய்தது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சுனில் ஷெட்டி அண்மையில் துபாய் சென்று டி.எஸ்.எல். ஹாக்ஸ் அணிக்கு தனது நட்சத்திர பலத்தை வழங்கினார். தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் டென்னிஸ் விளையாட்டு பிரிவில் டி.எஸ்.எல். நுழைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, டோயம் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.43 சதவீதம் உயர்ந்து ரூ.5.91ஆக இருந்தது. டி.எஸ்.எல். நிறுவனத்தின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.334 கோடியாகும்.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் டி.எஸ்.எல். நிறுவனம் வருவாயாக ரூ.3.39 கோடி ஈட்டியது. இருப்பினும் கடந்த நிதியாண்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.12.22 கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.1.93 கோடியும், நிகர லாபமாக ரூ.1.40 கோடியும் ஈட்டியிருந்தது.


Click it and Unblock the Notifications