இந்திய பங்குச்சந்தையில் முக்கியமாக விளங்கும் தேசிய பங்குச் சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் எவ்விதமான வர்த்தகமும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் எது எனவும் தெரியவில்லை என செய்திகள் பரவி வருகிறது.

இதன் மூலம் இன்றைய தினம் முழுமையாக தேசிய பங்குச்சந்தையை முழுமையாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மும்பை பங்குச்சந்தை எவ்விதமான பிரச்சனையும் சந்திக்காமல் சீராக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பெரிய எதிர்பார்ப்புடன் வர்த்தகம் துவங்கியது. சென்செக்ஸ் இயல்பான வர்த்தக நடையுடன் காலை வர்த்தகத்தில் சுமார் 200 புள்ளிகள் உயர்ந்து 31,600 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஆனால் தேசிய பங்குச்சந்சையில் எப் அன்ட் ஓ ஆர்டர்கள் முதலீட்டாளர்களுக்கு வெளியாகவில்லை. 10.30 பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது என்ற கூறிய என்எஸ்ஈ, 11.15க்கு மீண்டு பிரச்சனையை சந்தித்தது.
இதன் பின் இன்று தேசிய பங்குச்சந்தை வர்த்தகம் முழுமையாக முடக்கப்படும் என செய்திகள் வெளியாகி வேளையில் என்எஸ்ஈ அமைப்பு வர்த்தகத்தை 12.30 மணிக்கு துவங்கும் என தெரிவித்தது. இதற்குன் ப்ரீ ஓப்பனிங் வர்த்தகம் 12.15 மணிக்கு துவங்கப்பட்டு தற்போது சீராக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications