இந்திய சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்ற நிறுவனங்கள், தற்போது தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய நிதி திரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பல துறை சார்ந்த நிறுவனங்கள் தற்போது பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்து அதற்கான பணிகளை செய்ய துவங்கியுள்ளது.
இதன் படி சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் அனைத்து விதமான ஒப்புதல்களை பெறு இந்த வாரம் 2 நிறுவனங்கள் சுமார் 1,200 கோடி ரூபாய் வரையிலான நிதி திரட்ட 2 நிறுவனங்கள் இந்த வாரம் மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் களமிறங்குகிறது.
2 இரண்டு நிறுவனங்கள்
டிக்சான் டெக்னாலஜிஸ், பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் செப்டம்பர் 6-8 தேதிகளில் ஐபிஓவில் இறங்க உள்ளது.
டிக்சான் டெக்னாலஜிஸ்
நுகர்வோர் எல்க்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் டிக்சான் டெக்னாலஜிஸ் 600 கோடி ரூபாய் நிதிதிரட்ட தனது நிறுவனத்தின் 30,53,675 பங்குகளை பொது சந்தை முதலீட்டாளர்களின் வர்த்தகத்திற்காக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஐபிஓவில் இந்நிறுவன பங்குகளின் விலை 1,760-1,766 ரூபாய் வரையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
பார்த் ரோடு நெட்வொர்க்
Srei Infrastructure பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பார்த் ரோடு நெட்வொர்க், ஒரு பங்கு 195-205 ரூபாய் மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய் நிதிதிட்ட உள்ளது.
இந்நிறுவனம் 2.93 கோடி பங்குகளை விற்பனைக்காக வெளியிட உள்ளது.
டெக்னாலஜி முதலீட்டாளர்கள்
அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள், திறன் குறைபாடு, டெக்னாலஜி தேவைகள், இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் மூலம் ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் பங்குச்சந்தையில் பாதிப்பை சந்திதுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் நுகர்வோர் எல்க்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனம் டெக்னாலஜி முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications